பெட் ரூம் காட்சிக்கு ஓகே.. அனுபமா பரமேஸ்வரன் கேட்ட சம்பளம்.. தெறித்து ஓடிய தயாரிப்பாளர்!
சென்னை: மாடல் அழகியாக வலம் வந்த அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் மேரி சார்ஜ் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். குடும்ப குத்துவிளக்காக சினிமா பயணத்தை தொடங்கிய இவர், தற்போது பெட்ரூம் காட்சியில் நடிக்கவும் ஓகே சொல்லி, சம்பளத்தை மட்டும் ஏகத்திற்கும் உயர்த்தியுள்ளார்.
கொடி படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து தமிழ் ஆடியன்சுக்கு அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து அதர்வாவுடன் தள்ளிபோகாதே என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தராததால்,தெலுங்கு பக்கம் சென்ற அனுபமா அங்கு ஓவர் கவர்ச்சியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். இதனால், தமிழ் நமக்கு செட்டாகாது என்ற முடிவுக்கு வந்த அனுபமா, கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு ஓகே சொல்லி உள்ளார்.

தில்லு ஸ்கொயர்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சித்து ஜொன்னலகத்தாவுக்கு ஜோடியாக தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எனவே, அனுபமா அடுத்ததாக இந்த தில்லு ஸ்கொயர் படத்தினை எதிர்பார்த்து தான் காத்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனக்கு வரும் படங்களை எல்லாம் அவர் விடாமல் நடிப்பதாகவே கூறப்படுகிறது. இந்த தில்லு ஸ்கொயர் படத்தில் மடோனா செபாஸ்டியன், மீன் வெங்கட், முரளிதர் கவுட் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஓவர் கவர்ச்சி: இந்த படத்தில் அனுபமா கிளாமராக உடை அணிந்து ஹீரோவுடன் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இவருக்கு படவாய்ப்பு சரியாக இல்லாததால், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பணத்தை அள்ள நினைக்கிறார். இதனால், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் அனுபமா பணத்தை கேரக்டர், கதை என எதை பற்றியும் பேசாமல், முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி என எதுவாக இருந்தாலும், ஓகே அதற்கு தகுந்த படி சம்பளம் கொடுத்தால் மட்டும் என பேசி உள்ளார்.
ஓடிய தயாரிப்பாளர்: அனுபமாவின் இந்த பதிலை கேட்டு டென்ஷனாக தயாரிப்பாளர் ஒருவர் சரி சம்பளம் எவ்வளவு என்று கேட்க, அம்மணி ஒரு கோடி என கையை காட்ட பதறிப்போன அந்த தயாரிப்பாளர் தலை தெறிக்க அங்கிருந்து ஓடி இருக்கிறார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரவியதை அடுத்து, அனுபமாவிற்கு பட வாய்ப்பு வராததால், அனுபமா தற்போது சம்பளத்தை குறைத்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











