மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன ஒரு சந்தோசம்... அனுபமா பரமேஸ்வரன் க்யூட் பிக்!
சென்னை: இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்
தமிழுக்கு கொடி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அனுபமா அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்தவாறு செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ப்ரேமம்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ப்ரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

தமிழ் சினிமாவிற்கு கொடி
பிரேமம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களால் அதிக அளவு கொண்டாடப்பட்டது. படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் சினிமாவிற்கு கொடி படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய கொடி இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகப் படமாக அமைந்தது

அதர்வா உடன் தள்ளிப்போகாதே
தமிழில் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் கொடி படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அதன்படி இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கும் தள்ளிப்போகாதே படத்தில் நடித்துள்ளார்.

மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்தவாறு
சென்றாண்டே வெளியாக இருந்த தள்ளிப்போகாதே கொரோனா சூழல் காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த டிசம்பர் 3ல் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. இப்பொழுது அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனுபமா தமிழில் முழு மூச்சுடன் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அடுத்ததாக பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது . அந்த வகையில் இப்பொழுது மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்தவாறு செம ஹேப்பி மோடில் அனுபமா வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படம் இளசுகளை குஷி படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











