அமைதியை தேடிச் செல்கிறேன்...தனிமையில் கவிதை எழுதும் பிரபல நடிகை!

கொச்சி : நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது தனிமையில் உட்கார்ந்து கொண்டு கவிதை எழுதியவாறு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் அசத்தி வரும் இவர் கொடி படத்திற்கு பிறகு இப்பொழுது அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருக்கிறார்.

ஓரிரு படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் அனுபமா தனிமையில் நூடுல்ஸ் மண்டையுடன் உட்கார்ந்து கவிதை எழுத க்ளிக்கிய க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகிறது.

100 நாட்களை

100 நாட்களை

மலையாளத் திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வந்த காலம் மாறி இப்பொழுது மலையாள மொழியிலேயே வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் மலையாள மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழில் சக்கைப்போடு போட்டு 100 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்தது.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருக்க அல்போன்ஸ் புத்திரன் படத்தை இயக்கி இருந்தார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பள்ளி காலத்தில் நிவின் பாலி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். படம் மலையாளத்தில் விடவும் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதில் நடித்த அனுபமாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இங்கேயும் உருவானது.

த்ரிஷா நெகட்டிவ் ரோலில்

த்ரிஷா நெகட்டிவ் ரோலில்

ப்ரேமம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வந்த அனுபமா தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் த்ரிஷா நெகட்டிவ் ரோலில் அசத்தியிருப்பார். அனுபமா வழக்கம்போல க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். படம் வெற்றி பெற்றது ஆனால் அதன்பிறகு அனுபமா தமிழ் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

அதர்வாவுடன் ஜோடி

அதர்வாவுடன் ஜோடி

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா இப்பொழுது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டுள்ளார். நானி நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நின்னுக்கோரி அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

அமைதியை தேடிச் செல்கிறேன்

அமைதியை தேடிச் செல்கிறேன்

நடிப்புக்கு தகுந்தவாறு அளவான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை தொடர்ந்து குளிர்ச்சி படுத்தி வரும் அனுபமா இப்பொழுது மூணாறில் தனிமையில் கலரிங் செய்த நூடுல்ஸ் மண்டையை காட்டிக்கொண்டு எதையோ எழுதியவாறு "அமைதியை தேடிச் செல்கிறேன்' என தலைப்பிட்டிருக்கும் இந்த க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X