திடீர் திருமணமா? கழுத்தில் தாலியோடு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அனுபமா?
சென்னை 2015 ஆம் ஆண்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பிரேமம் படத்தில் மேரி ஜார்ஜாக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர், கழுத்தில் தாலியோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள்.
பிரேமம் படத்தில், நிவின் பாலி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலில் பல கோடியை அள்ளியது. இப்படம் மலையாளத்தில் இருந்த போதும், இந்த படத்திற்கு என்றே தனி ரசிகர்கள் தியேட்டரை முண்டி அடித்துக்கொண்டு படம் பார்த்தார்கள்.

இப்படத்திற்கு பின் தமிழில், தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்த கோடி படத்தில் அனுபமா அறிமுகம் ஆனார். இப்படத்தில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். கோடி படம் வெற்றி பெற்ற போதும், அனுபமாவுக்கு தமிழில் எந்த வாய்ப்பும் வராததால், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் ஜோடியாக நடித்தார். தற்போது, ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 16ந் தேதி வெளியாக உள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்: தெலுங்குக்கு சென்ற அனுபமா, அங்கு கிளாமர் ரோல்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இதனால் அங்கு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் உஷாரான அனுபமா, கவர்ச்சியாக நடிக்க அதிக சம்பளம், ஹோம்லி வேடத்துக்கு தனி சம்பளம் என கல்லாக்கட்டி வரும் அனுபமா, தெலுங்கு படமொன்றில் நடிக்க, லிப் லாக் சீன் ஒன்று50 லட்சம் வேண்டும் என தடாலடியாக கேட்டுள்ளதாகவும், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அதை விட கூடுதலாக தனி ரேட்டு பேசியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தனி குண்டையே தூக்கிப் போட்டார்.

திடீர் திருமணம்: இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்தில் தாலியோடு,பட்டு புடவை கட்டி புதுமணப்பெண் போல் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அனுபமாவுக்கு திருமணமா என்றும், யார் மாப்பிள்ளை என்று கேட்டு இணையத்தை ரணகளமாக்கி வருகின்றனர். ஆனால், இது சைரன் படத்தில் வரும் காட்சி என்று தெரியவந்ததுமே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











