அம்மாவாக உணர்கிறேன்.. வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்!
ஐதராபாத் : நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார்.
தமிழில், தெலுங்கு, மலையாளம் என இவர் நடித்துவரும் படங்களின் பட்டியல் நீண்டு வருகிறது.
வரும் 13ம் தேதி இவரது நடிப்பில் உருவாகியுள்ள கார்த்திகேயா 2 படம் ரிலீசாக உள்ளது. இதன் பிரமோஷன்களில் இவர் கலந்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் அறிமுகமானது மலையாளத்தில்தான். பிரேமம் படத்தில் சாய் பல்லவி, மடோனா சபாஸ்டியன் ஆகியோருடன் இணைந்து இவர் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. தொடர்ந்து அம்மணி காட்டில் படமழைதான்.

தமிழில் இரண்டு படங்கள்
தமிழில் தனுஷுடன் கொடி மற்றும் அதர்வாவுடன் தள்ளிப் போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு தமிழில் தொடர்ந்து படங்கள் அதிகமாக கமிட்டாகவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவர் அதிகமாக நடித்து வருகிறார். தற்போது வரும் 13ம் தேதி இவரது நடிப்பில் கார்த்திகேயா 2 படம் ரிலீசாக உள்ளது.

கார்த்திகேயா 2 படம்
இந்தப் படத்தில் நிகிலுடன் இணைந்து நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போனது. இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் படம் ரிலீசாகவுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்காமல் தவிர்த்ததாக அனுபமா மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிரமோஷன்களில் பங்கேற்காத அனுபமா
நடிகை நயன்தாரா தன்னுடைய படங்களின் பிரமோஷன்களில் எப்போதுமே கலந்துக் கொள்ள மாட்டார். அவரை அனுபமாவும் பின்பற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து படத்தின் பிரமோஷனின்போது நிகிலும் கண்டனம் தெரிவித்திருந்தார். சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வரும் அனுபமா, பிரமோஷன்களுக்கு மட்டும் வராதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

நிகிலுக்கு பதில்
இதற்கு பதிலளிக்கும் வகையில் தான் அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் அதன் படப்பிடிப்புகளில் இரவும் பகலும் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய தேவை உள்ளதால்தான் இந்தப் படத்தின் பிரமோஷனில் பங்கேற்க முடியவில்லை என்றும் அனுபமா தெரிவித்துள்ளார். தன்னுடைய கஷ்டத்தை நிகில் புரிந்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

4 மொழிகளில் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீசாகவிருந்த இந்தப் படம் மேலும் ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள அனுபமா, தற்போது புடவையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அழகான புடவையில் புகைப்படங்கள்
அழகான பட்டுப்புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என்று இந்தப் புகைப்படங்களில் அழகு காட்டுகிறார் அனுபமா. மேலும் குறும்புத்தனமாகவும், அழகான புன்னகையை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களை இந்தப் படங்கள் வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த காஸ்ட்யூமில் தான் அம்மாவாக உணர்வதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











