செல்ஃபி எடுக்க மறுத்த அனுபமா… ஆத்திரத்தில் ரசிகர் செய்த காரியம்.. இப்படி கூடவா செய்வாங்க!

சென்னை : நடிகை அனுபமா செல்ஃபி எடுக்க அனுமதிக்காததால் ஆத்திரத்தில் ரசிகர்கள் மோசமான காரியம் செய்துள்ளனர்.

மலையான நடிகையான அனுபமா பரமேசுவரன், மெகா ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

தெலுங்கில் பிஸி

தெலுங்கில் பிஸி

பார்ப்பதற்கு மெழுகு சிலை போல அழகாக இருக்கும் அனுபமா, தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாள படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த அனுபமாவிற்கு தமிழில் பெரிதாக படங்கள் இல்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ரௌடி பாய்ஸ்

ரௌடி பாய்ஸ்

நடிகை அனுபமா அண்மையில் ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து நடித்த ரௌடி பாய்ஸ் படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது குறிப்பாக அந்த படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் மிகவும் நெருக்கமாக லிப்லாக் காட்சியில் நடித்தது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாது.

செல்ஃபி மறுத்த அனுபமா

செல்ஃபி மறுத்த அனுபமா

பிஸியான நடிகையாக மாறி உள்ள அனுபமா, தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அனுபமா வரும் தகவல் வெளியானதை அடுத்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடை திறப்பு விழாவை முடித்துவிட்டு அனுபமா வெளியேவந்த போது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்ததால், அனுபமா செல்ஃபி எடுக்க மறுத்துவிட்டு காரில் ஏறினார்.

இப்படிக்கூடவா செய்வாங்க

இப்படிக்கூடவா செய்வாங்க

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அனுபமா கார் டயரில் உள்ள காற்றை பிடுங்கிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்கள் அனுபமாவை மீண்டும் கடைக்குள் அழைத்து சென்று, கடையின் பின்புறமாக வேறொரு காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் செல்ஃபி எடுக்காத ஆத்திரத்தில் இப்படிக்கூடவா செய்வாங்க என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X