துருவ் விக்ரமுடன் காதலா? பிரேக்கபா?.. இன்ஸ்டாவில் மாறி மாறி மர்மப்பதிவு போட்ட அனுபமா பரமேஸ்வரன்!

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு என்னதான் ஆச்சு? என்னதான் சொல்ல வராங்கனு ரசிகர்கள் தலையைப் பிச்சுக் கொள்ளும் அளவுக்கு, துருவ் விக்ரமுடனான காதல் மற்றும் பிரேக்அப் வதந்திகளுக்கு மத்தியில் இன்ஸ்டாகிராமில் அவர் போட்டு வரும் மர்மப் பதிவுகள் இணையவாசிகளை குழப்பி வருகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்: தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகை அனுப்பமா பரமேஸ்வரன், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை காதலித்து வருவதாகச் சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியது. மாரியரசன் இயக்கத்தில் இருவரும் இணைந்து 'பைசன்' படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டதாகவும், பல இடங்களுக்கு டேட்டிங் சென்றதாகவும் கூறப்பட்டது. அதற்குச் சான்றாகச் சமீபத்தில் 'ஸ்பாட்டிஃபை' மியூசிக் ஆப்பில் 'ப்ளூ மூன்' என்ற பிளேலிஸ்ட்டில், அனுப்பமாவும் துருவ் விக்ரமும் நெருக்கமாக முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படம் வெளியாகி, இவர்களின் காதலை உறுதிப்படுத்தியது.

Anupama Parameswaran dhruv vikram
Photo Credit:

பிரேக்கப்பா: இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டு வந்த நேரத்தில், கடந்த வாரம் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட ஒரு பதிவு ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்தது. அதில், சில சமயங்களில் மனம் அமைதியைத் தேட எதற்குமே உதவாத பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கிறது. என் குரல்... என் வாழ்க்கை... அதை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை, பயமும் இல்லை. என்னை மீண்டும் என்னிடமே கொண்டுவந்து சேர்த்ததற்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி என மிக பதிவிட்டிருந்தார்.

Anupama Parameswaran dhruv vikram
Photo Credit:

மர்மப்பதிவு: இதைப் பார்த்த நெட்டிசன்கள், துருவ் விக்ரமும் அனுப்பமாவும் பிரிந்து விட்டார்களா? இவ்வளவு சீக்கிரம் காதலில் பிரேக்அப் ஆகிவிட்டதா? என ஆளாளுக்குக் கருத்துக்களைக் கொட்டத் தொடங்கினார்கள். ஆனால், தற்போது அனுபமா,'Sunday Kinda Love' என பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ஜாலியாகச் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். முந்தைய பதிவில் ஆழமான சோகமாக இருப்பாக பேசிவிட்டு, இப்போது சிரித்தபடி 'சண்டே லவ்' எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் முற்றிலும் குழம்பிப் போய்விட்டனர். "அனுப்பமாவுக்கு என்னதான் ஆச்சு? துருவ் கூட காதலில் இருக்காங்களா இல்லையா? என்னதான் சொல்ல வர்றாங்கன்னே புரியலையே என இணையவாசிகள் மண்டையை உடைத்துக் கொண்டு கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X