சிரிப்பால் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்... சொக்கி போன ரசிகர்கள்!
சென்னை : மலையாள சினிமாவை தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்
ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் உச்சகட்ட முத்தக்காட்சியில் நடித்து சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டார்
தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது சிரிப்பாலே மயக்கும் அழகிய புகைப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

எண்ணக் கூடிய அளவில்
தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மிகக்குறைந்த படங்களிலேயே நடித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி மற்ற மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று பட்டையைக் கிளப்பிய பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆனார் அனுபமா.

அரசியல் கதை களத்தில்
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் சினிமாவிற்கு கொடி படத்தில் நடித்து அறிமுகமானார். நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். ஆக்ஷன் கலந்த அரசியல் கதை களத்தில் வெளியான கொடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
கொடி வெற்றி பெற்றபோதும் அதைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் அனுபமா நடித்துள்ளார் தெலுங்கில் நானி நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நின்னுக்கோரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தள்ளிப்போகாதே வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் ரீமேக் செய்து இயக்கி தயாரித்தும் இருந்தார். இப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது

உச்சகட்ட முத்தக்காட்சியில்
மலையாளம்,தமிழை விடவும் தெலுங்கில் அனுபமாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் அனுபமா நடிப்பில் வெளியான ரவுடி பாய்ஸ் திரைப்படத்தில் உச்சகட்ட முத்தக்காட்சியில் ரொமான்டிக்காக நடித்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டார். அந்த முத்தக் காட்சியில் நடிக்க மட்டுமே பல லட்சம் ரூபாய் சம்பளமாக அனுபமா பெறப்பட்டதாகவும் பேசப்பட்டது.
Recommended Video

புன்னகையை நகையாக
இப்பொழுதே 18 பேஜஸ், கார்த்திகேயா 2 மற்றும் ஹெலன் ஆகிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வரவர கவர்ச்சியிலும் அதிக முக்கியத்துவம் காட்டி வரும் அனுபமா சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன அந்த வகையில் இப்போது புன்னகையை நகையாக அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே என வர்ணித்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











