மீண்டும் விஜய் இயக்கத்தில் இணையும் அனுஷ்கா… ஜனவரியில் சூட்டிங்
சென்னை : நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கில் சிறப்பான படங்களில் நடித்துள்ளார்.
பாகுபதி, பாகமதி படங்கள் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளன.
இந்நிலையில் தற்போது இவர் தமிழில் 3வது முறையாக இயக்குநர் விஜய் டைரக்ஷனில் இணையவுள்ளார்.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா ரெண்டு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். நடிகர் மாதவனுடன் இவர் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. ஆனால் சில வருட இடைவெளியில் மீண்டும் தமிழில் கால்பதித்த அவர், விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக விளங்கினார்.

சிங்கம் படம்
குறிப்பாக சூர்யாவுடன் இவர் நடித்திருந்த சிங்கம் பாகங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. இதேபோல பாகுபலி படமும் தமிழில் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அனுஷ்கா இடையில் படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டார்.

தெலுங்கில் மீண்டும் அனுஷ்கா
பாகமதி படம் இவருக்கு ஓரளவுக்கு கைகொடுத்த நிலையில் சைலன்ஸ் படம் வெற்றி பெறவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இதேபோல தமிழிலும் அவர் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

விஜய் டைரக்ஷனில் அனுஷ்கா
இயக்குநர் விஜய் டைரக்ஷனில் தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. இந்தப் படங்களில் அவர் நடித்திருந்த கதாபாத்திரங்கள் சிறப்பாக பேசப்பட்டன. குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தில் தந்தையையும் மகளையும் சேர்த்து வைக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

விஜய் -அனுஷ்கா கூட்டணி
இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய் இயக்கத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கமர்ஷியல் படமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தற்போது அனுஷ்கா நடிக்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜனவரியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











