லெஜண்ட் பாலய்யாவை சீண்டிய அனுஷ்கா.. இதுதான் அவர் செய்த தவறாம்.. ரொம்ப கிரேஸியான முடிவு
சென்னை: பாகுபலி படங்களில் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுஷ்கா தற்போது தான் செய்த தவறுக்காக மனம் வருந்தியுள்ளார். தெலுங்கு திரையுலகில் லெஜண்ட் நடிகராக இருக்கும் ஒருவர் படத்தில் நடித்த போது என்ன கதை என்று தெரியாமல் நடித்து விட்டதாகவும் இதனால் என் கரியரே லாஸ் ஆனதாகவும் கூறி மனம் வருந்துகிறார். மேலும், அனுஷ்கா யார் படத்தில் நடித்தார். அந்த நடிகர் யார் என்பதை நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.
ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் அனுஷ்கா. இவர் தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, அஜித், ரஜினி என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழில் இவரை மேலும் பிரபலம் ஆக்கியது அருந்ததி, பாகுபலி, பாகுபலி 2 போன்ற பிரம்மாண்ட படங்கள் தான், அருந்ததி படத்தில் லீட் ரோலில் நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார் அனுஷ்கா. தெலுங்கில் ஸ்டார் நடிகர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் காதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கஞ்சா வியாபாரி: இயக்குநர் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகும் காதி படத்தில் நடிக்கும் அனுஷ்கா இதில் கஞ்சா வியாபாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படம் முக்கியமான குற்றவாளியாகவும் கேங்ஸ்டர்களை வழிநடத்தும் தலைவியாக அனுஷ்கா நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காதி படத்தை தொடர்ந்து அனுஷ்கா கத்தனார் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
அவர் படத்தில் நடித்தது தவறு: 10 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்த அனுஷ்கா ஒரு மாபெரும் நடிகர் படத்தில் நடித்தது தவறு என தற்போது தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 2008ஆம் ஆண்டு ஓக்க மகாடு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தின் கதை என்ன என்று கேட்காமலேயே அவர் படத்தில் நடித்தேன். இப்படத்தில் எனக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை எனவும் இப்போது வருந்துகிறேன். அந்த படத்தில் நடித்தது மிகவும் தவறாக கருதுகிறேன் என்றும் அனுஷ்கா தெரிவித்திருக்கிறார். இதனால், சமூகவலைதளங்களில் அனுஷ்காவை பாலகிருஷ்ணா ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

படம் பிளாப்: ஒக்க மகாடு திரைப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் கமர்ஷியல் ரீதியாக தோல்விப்படமாக அமைந்தது. இந்தியாவிலேயே மிக மோசமான படம் எனவும் சினிமா விமர்சகர்களும் தெரிவித்தனர். இப்படத்தில் நடிகை அனுஷ்கா பாலகிருஷ்ணாவுடன் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார். அதை தாண்டி கதாப்பாத்திரம் பெரிதாக இவருக்கு இல்லை. மேலும், அதன் பிறகு பில்லா, மிர்ச்சி போன்ற படங்களின் மூலம் ஹிட் ஹீரோயினாக மாறினார். அருந்ததி படத்திற்கு பிறகு அவரை ரசிகர்கள் தலையில் வைத்து காெண்டாட தொடங்கினர். இதனிடையே, அனுஷ்கா பாலகிருஷ்ணா குறித்து கூறியதால் அனுஷ்காவை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











