சினிமாவுக்கு வந்து 15 வருடம்... எப்ப கல்யாணம்? கேள்வி கேட்ட நடிகை...அசத்தலாகப் பதில் சொன்ன அனுஷ்கா

By

சென்னை: தனது திருமணம் எப்போது என்பது குறித்து நடிகை அனுஷ்கா பதிலளித்துள்ளார்.

Recommended Video

இரண்டாம் தாரமாக போகும் பிரபல நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்.. அசத்தல் அப்டேட்ஸ்!

தெலுங்கு சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா. தமிழிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அனுஷ்கா, சினிமாவுக்கு வந்து 15 வருடம் ஆனதை அடுத்து, சைலன்ஸ் படக்குழு, ஐதராபாத்தில் அவருக்கு பாராட்டு விழாவையும் படத்தின் புரமோஷனையும் ஒன்றாக நடத்தியது.

4 மொழிகளில்

4 மொழிகளில்

இந்தப் படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார். மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

பாராட்டு விழா

பாராட்டு விழா

இந்தப் படக்குழு அனுஷ்காவுக்கு நேற்று நடத்திய பாராட்டு விழாவில், ஏராளமான தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டனர். பெரிய கேக் கொண்டு வரப்பட்டு அதை அனுஷ்கா வெட்டினார். பின்னர் அவருக்கு சிறப்புத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் தெலுங்கு திரையுலகினர், நடிகை அனுஷ்காவின் நடிப்பையும் பாராட்டிப் பேசினார்.

நடிகை சார்மி

நடிகை சார்மி

பின்னர் பேசிய நடிகை அனுஷ்கா, தன்னை தெலுங்கு சினிமாவில் சூப்பர் படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் புரி ஜெகநாத் உட்பட சைலன்ஸ் பட இயக்குனர் வரை பலருக்கு நன்றி சொல்லிவிட்டு சிம்பிளாக பேச்சை முடித்துக்கொண்டார். அப்போது, விழாவுக்கு வந்திருந்த நடிகை சார்மி, 'எப்ப கல்யாணம்?' என்று கேட்டார், அனுஷ்காவிடம். அவர் சிரித்துக்கொண்டே, 'எனக்குத் தெரியாது... ஆனால், எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது, எப்ப கல்யாணம்? என்று அவரிடம் கேட்டார்.

கல்யாணம் எப்போது

கல்யாணம் எப்போது

இதனால் அங்கிருந்தவர்கள் சிரித்தனர். ஏனென்றால் சார்மிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. பின்னர் இயக்குனர் புரி ஜெகநாத், 'எனக்கு திருமணம் ஆன நடிகைகளைப் பிடிக்காது. அதனால் நீங்கள் இப்படியே இருங்கள்' என்றார். உடனே குழப்பமான நடிகை அனுஷ்கா, 'என் கல்யாணம் எப்போது என்பதை கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிவிப்பேன்' என்றார்.

காதல் கிசு கிசு

காதல் கிசு கிசு

இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதை இருவரும் மறுத்துள்ளனர். நாங்கள் நண்பர்கள்தான், எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறி வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38.

பிரகாஷ் கோவலமுடி

பிரகாஷ் கோவலமுடி

அவர் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கே.ராகவேந்திர ராவின் மகன். தமிழில், ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கியவர். இந்தியில் ஜட்ஜ்மென்டல் ஹே கியா என்ற படத்தை இயக்கியுள்ளார். இது பற்றிய செய்தி தெலுங்கு சினிமாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X