தமிழில் மீண்டும் அதிரடிகாட்ட வருகிறார் அனுஷ்கா… யாருடைய இயக்கத்தில் தெரியுமா ?
சென்னை : தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி.
சமீபத்தில் உடல் எடை கூடியதால் பட வாய்ப்ப்புகளை இழந்தார்.

அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் மாதவனுடன் இரண்டு திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி போன்ற படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.

அமுல் பேபி போல
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டி சும்மா அமுல் பேபி போல இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவால் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால், பல பட வாய்ப்புகளை கை நழுவிப்போயின. கடைசியாக வித்தியாசமான நடிப்பில் உருவான நிசப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

திருமண வதந்தி
35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவருக்கு, திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் பல்வேறு வரன்களை பார்த்து வருகின்றனர். சமீபத்தில் அனுஷ்கா தன்னை விட, வயது குறைந்த விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தாக கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
Recommended Video

தமிழில் மீண்டும்
இந்நிலையில், அனுஷ்கா ஏ.எல்.விஜய் அடுத்து இயக்கும் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏற்கனவே தெய்வதிருமகள் திரைப்படத்தில் அனுஷ்கா நடித்திருந்ததால், இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











