தொடரும் தோல்வி.. மீண்டும் ஹிட் இயக்குநருடன் சேரும் பிரபல நடிகை... கமர்ஷியல் படத்தில் கமிட்டடாம்!
சென்னை: பிரபல நடிகையான அனுஷ்கா மீண்டும் இயக்குநர் ஏஎல் விஜய்யின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. ஆக்ஷன், ரொமான்ஸ், குணச்சித்திரம், நகைச்சுவை என என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
குறிப்பாக வரலாற்று கதாப்பாத்திரங்களிள் என்றால் தன்னை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதை போல அசத்தி வருகிறார் நடிகை அனுஷ்கா.

தமிழில் டாப் நடிகர்களுடன்
தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை அனுஷ்கா தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அனுஷ்கா நடிப்பில் வெளியான சிங்கம் சீரிஸ் படங்கள் அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் பெரும் ஹிட்டானது.

பாகுபலி படத்திற்கு பிறகு
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்கள் பெரும் ஹிட்டானது. இந்தப் படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார் நடிகை அனுஷ்கா. பாகுபலி தி கன்க்ளூஷன் படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

தொடரும் தோல்வி
கடைசியாக அவரது நடிப்பில் நிசப்தம் படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் சைலன்ஸ் என்ற டைட்டிலில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓடிடியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பாகுபலிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்தது.

ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம்
உடல் எடையும் கூடியிருந்ததால் எடை குறைப்பில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை அனுஷ்கா. நல்ல கதைக்காக காத்திருந்த அனுஷ்கா நிசப்தம் படத்திற்கு பிறகு புதிதாக எந்தப் படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை. தற்போது வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நடிகை அனுஷ்கா.
Recommended Video

மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி
இந்நிலையில் இயக்குநர் ஏஎல் விஜய்யின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா ஒப்பந்தமானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











