Don't Miss!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தெலுங்கு இயக்குநரை திருமணம் செய்கிறாரா நடிகை அனுஷ்கா... தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
ரொமான்ஸ், ஆக்ஷன் என கலக்கி வருகிறார் நடிகை அனுஷ்கா. அவரது நடிப்பில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்கள் பெரும் ஹிட்டானது.
விவாகரத்து விவகாரம்... நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு.. பரபரக்கும் டோலிவுட்!

மாப்பிள்ளை பார்க்கும் படலம்
அழகு பதுமையாகவும் வீரமிக்க பெண்ணாகவும் தேவசேனா கதாப்பாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. நடிகை அனுஷ்காவுக்கு நீண்ட நாட்களாகவே மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடைபெற்று வருகிறது.

மீண்டும் தலைப்பு செய்தி
நடிகர்கள், உள் நாட்டு தொழிலதிபர்கள் வெளிநாட்டு தொழிலதிபர்கள் என பல மாப்பிள்ளைகளை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் திருமணம் குறித்த தகவல்களால் தலைப்பு செய்தியாகியுள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

தெலுங்கு இயக்குநருடன் திருமணம்
39 வயதான நடிகை அனுஷ்கா, இந்த ஆண்டு மே மாதத்தில், துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த செய்திகள் வெறும் யூகங்களாக மாறியது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய ஒரு தெலுங்கு இயக்குநரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள்
இந்த செய்திதான் தற்போது சினிமாத்துறையில் இருக்கும் பரபரப்பான செய்தி ஆகும். இ டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி அனுஷ்காவின் திருமண விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு தனியார் விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸுடன் டேட்டிங்
ஸ்வீட்டி என தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அனுஷ்காதான், திருமணம் தொடர்பான இந்த வதந்திகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. அனுஷ்கா கடந்த காலத்தில் பல்வேறு பிரபலங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பாகுபலிக்குப் பிறகு, அவர் பிரபாஸுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது.

திரையில் மட்டுமே ஜோடி
மேலும் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டதாக செய்திகள் வந்தன. வதந்திகள் தீயை போல் பரவியதால் தனது மவுனத்தை கலைத்து அனைத்து வதந்திகளையும் நிராகரித்தார். மேலும் பிரபாஸை தனக்கு 15 வருடங்களுக்கு மேலாக தெரியும், அவர் எனது 3AM நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஸ்க்ரீனில் ஒரு அற்புதமான ஜோடியை உருவாக்குகிறோம் என்றார்.

தொழில் அதிபருடன் திருமணம்
மேலும் எங்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது இருந்திருந்தால், இந்த நேரத்தில் அது வெளியே வந்திருக்கும், என்று மார்ச் 2020 இல் டெக்கான் க்ரானிக்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார் அனுஷ்கா.
முன்னதாக சில செய்திகள் நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தன.

அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்
தென்னிந்திய அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனால் அவர் இதையெல்லாம் மறுத்தார். மேலும் தான் திருமணம் செய்துகொள்ளும் போது கண்டிப்பாக அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.