Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நடிக்க மறுத்த சமந்தா… ஒகே சொல்லி தட்டி தூக்கிய அனுஷ்கா ஷெட்டி!
சென்னை : கன்னட படம் ஒன்றில் சமந்தா நடிக்க மறுத்ததை அடுத்து அந்த படத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி கமிட்டாகி உள்ளார்.
மாதவன் நடித்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் அனுஷ்கா.
இதையடுத்து ரஜினி, விஜய்,சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
ஜூலியை
ஆபாசமாக
திட்டினாரா
நிரூப்..
சிம்பு
இதையெல்லாம்
கேட்க
மாட்டீங்களா
என
கொதிக்கும்
ரசிகர்கள்!

அனுஷ்கா
தெலுங்கு திரையுலகில் அருந்ததி, தேவசேனா என பல வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி நடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக உடல் எடை கூடி குண்டாக மாறினார். ஆனால், அதன்பின் உடல் எடை குறையாததால் பல படவாய்ப்புகளை இழந்தார்.

திருமண ஏற்பாடு
39 வயதான அனுஷ்காவுக்கு பட வாய்ப்பு இல்லாததால், வீட்டில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. அனுஷ்கா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், கன்னட படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகப் பின்னணி பாடகி நாகரத்னம்மாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாக உள்ள படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகி உள்ளார்.

நோ சொன்ன சமந்தா
இந்த படத்திற்காக சமந்தாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதால் இந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக தமிழ் நேரடித் திரைப்படங்களில் நடிக்காமல் உள்ள அனுஷ்கா, தமிழ் சினிமாவுக்கு திரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில்
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் அனுஷ்கா. பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஏ.எல்.விஜய் விஜய் கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கி இருந்தார். அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.