தெலுங்கில் ரீமேக்காகும் நெற்றிக்கண்… நயன்தாரா கேரக்டரில் நடிப்பது யார் தெரியுமா?
சென்னை : தெலுங்கில் ரீமேக்காக உள்ள நெற்றிக்கண் படத்தில் அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
Recommended Video
முன்னணி தயாரிப்பு நிறுவனம், இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அடிவிசேஷ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நெற்றிக்கண்
2011-ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'பிளைண்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரிமேக் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் தயாரித்திருந்த இப்படத்தில், நடிகை நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பார்வை இழந்த பெண்ணாக
விபத்து ஒன்றில் தன் கண் பார்வையை இழக்கும் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. ஒரு மழை இரவில், ஒரு பாலியல் சைக்கோவிடம் சிக்குகிறார். பல பெண்களைக் கடத்தி சித்திரவதை செய்யும் அந்த சைக்கோ, துர்காவை என்ன செய்தான், சைக்கோவிடம் இருந்து துர்கா தப்பித்தாரா, மற்ற பெண்களையும் மீட்டாரா என்பதே கதை. இந்தகதையை பல திருப்பங்களுடன் சுவாரசியமாக அழகாக நகர்த்தி இருக்கிறார் மிலிந்த் ராவ்.

தெலுங்கு ரீமேக்கில்
இந்நிலையில், நெற்றிக்கண் படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில், அனுஷ்கா நடிக்க சம்மதிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அடிவிசேஷ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிசப்தம்
நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில், மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, தெலுங்கு நடிகர்களான சுப்பராஜு, ஶ்ரீனிவாஸ் அவசராலா, ஹாலிவுட் புகழ் மைக்கேல் மேட்சன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தினர் நடித்திருந்தனர்.

பேய் வில்லா
இப்படத்தில் ஒரு ஓவியத்தை எடுக்க 'பேய் வில்லா' என்று அறியப்படும் வீட்டுக்குள் செல்லும் அனுஷ்கா, அங்கே தன் காதலனான மாதவனை இழக்கிறார். மாதவனைப் பேய்தான் கொன்றது என ஊரே நம்பும்போது, யார் கொன்றார்கள் எனத் துப்புத் துலக்கும் டிடெக்டிவான அஞ்சலி, உண்மையை ஊருக்கு உரக்கச்சொன்னாரா என்பதுதான் படத்தின் பயங்கரமான கதையை கொடுத்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

விரைவில் திருமணம்
நிசப்தம் திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா ஷெட்டி எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. கொரோனா தொற்று பரவ துவங்கியதால், ஆந்திராவிற்கு சென்று தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் அனுஷ்கா. 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். மேலும், திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் பல்வேறு வரன்களை பார்த்து வருகின்றனர். திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதால் கூடிய விரைவில் இவருக்கு திருமணம் நடைபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அனுஷ்கா தன்னை விட, வயது குறைந்த விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











