கலக்கல் கறுப்பு சேலை.. ஜிவ்வென்று இழுக்கும் ஸ்லிம் அழகுடன்.. பேரழகி தேவசேனா.. வைரலாகும் போட்டோக்கள்
சென்னை: நடிகை அனுஷ்கா கறுப்பு நிற சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
நடிகை அனுஷ்கா தெலுங்கில் சூப்பர் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா.
Recommended Video
தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அனுஷ்கா, தமிழில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பலருடனும் நடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

தேவசேனாவாக
ஹீரோக்களுடன் டூயட் பாடுவது மட்டுமின்றி அருந்ததி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து அசத்தினார் அனுஷ்கா.

பாகுபலி படம்
இந்த படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானார் அனுஷ்கா. வசூலிலும் சாதனை படைத்தது அனுஷ்காவின் பாகுபலி படம்.

உடல் எடை
ஏராளமான விருதுகளை குவித்துள்ள அனுஷ்கா தற்போது நடிகர் மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கறுப்பு நிற சேலையில்
அவ்வப்போது அவரது போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா கறுப்பு நிற சேலையில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.

பாறையின் மீது..
கறுப்பு நிற சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய செம செக்ஸியாக உள்ளார் அனுஷ்கா. மலைப்பாங்கான இடத்தில் பாறையின் மீது அமர்ந்திருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி.

அபிஷேகம் போன்று..
அவர் மீது தாமரை மலருடன் சேர்த்து அபிஷேகம் செய்வது போன்று தண்ணீர் ஊற்றப்படுகிறது. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பழைய போட்டோ
இந்த போட்டோக்கள் 2008ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகள். ஆனால் இவை இப்போது இணையத்தில் பரவி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











