Actress Anuya bhagwat: வுமன் இன் பிளாக்.. அசத்தலான போட்டோவை பகிர்ந்த அனுயா பகவத்!

சென்னை: இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகை அனுயா பகவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.

இந்தி திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் அனுயா பகவத். அதன் பின் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார்.அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Actress anuya bhagwat latest instagram post

சிவா மனசுல சக்தி: நடிகை அனுயா பகவத் பல படங்களில் நடித்திருந்தாலும், சிவா மனசுல சக்தி என்ற படம் தான் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த படத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பும் நகைச்சுவையும் இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கிறது. அந்த படத்திற்கு என்றே தற்போது வரை தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனுயா பகவத்தின் ஆபாசமான படங்கள், வீடியோக்களை பாடகி சுசித்ரா வெளியிட்டு புயலை கிளப்பினார். அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிக்காமல், அந்த போட்டோவை கலைநயத்துடன் பாருங்க, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என்று விளக்கம் கொடுத்து ரசிகர்களின் வெறுப்பை பெற்றார்.

Actress anuya bhagwat latest instagram post

மன அழுத்தத்தில் இருந்தேன்: இதுகுறித்து அண்டையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அனுயா, மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் அந்த பிரச்சனையை நான் எப்படி எதிர் கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம். நான் இன்று உயிரோட இருக்க காரணமே குடும்பம் தான். அவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் என்றார்.

Actress anuya bhagwat latest instagram post

வுமன் இன் பிளாக்: இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டா இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்வதை வாடிக்கையாக வைத்து இருக்கறார். அந்த வகையில் தற்போது இவர் வுமன் இன் பிளாக் லுக்கில் பிளாக் மேக்கப்போட்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X