Actress Anuya: நல்ல ஆண்கள் யாரும் இல்லை.. திருமணம் குறித்து பேசிய நடிகை அனுயா!

சென்னை: நடிகர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனுயா.

தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Actress Anuya opens up about the rumours with actors and directors

இயக்குநர் ஷங்கர் மற்றும் விஜய் காம்பினேஷனில் வெளியான நண்பன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகை அனுயா: நடிகை அனுயா தமிழில் சிவா மனசுல சக்தி என்ற படம் மூலம் அறிமுகமானவர். நடிகர் ஜீவா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் அனுயாவின் இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மதுரை சம்பவம், நகரம் என சுந்தர் சி உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.

நண்பன் படத்தில் அனுயா: மேலும் இயக்குநர் ஷங்கர் -விஜய் கூட்டணியில் வெளியான நண்பன் படத்தில் ஹீரோயின் இலியானாவின் அக்காவாக நடித்திருந்தார். இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் வாய்ப்புகள்தான் தொடர்ந்து அமையவில்லை. பிக்பாஸ் சீசன் ஒன்றிலும் போட்டியாளராக கலந்துக் கொண்ட இவர், அதன்மூலமாகவும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளானார். துபாயை சேர்ந்த அனுயா சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் செட்டில் ஆனார்.

திருமணம் குறித்து அனுயா: இந்நிலையில் தற்போது அனுயாவின் திருமணம் குறித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. துபாயில் பிறந்த தான் பொறியியல் படிப்பை முடித்தவுடன் சினிமாவிற்கு வந்துவிட்டதாகவும் தனக்கு தமிழ் தெரியாத நிலையில், தான் நடித்த நடிகர்களுடன் தன்னை இணைத்து தவறான வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜீவா, சுந்தர் சி, விஜய் ஆண்டனி ஆகியோருடன் தன்னை இணைத்து விமர்சிக்கப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நல்ல ஆண்கள் இல்லை: அந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும் தான் தற்போது தனியாகத்தான் இருப்பதாகவும் அனுயா குறிப்பிட்டுள்ளார். மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அனுயா, தன்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 7 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடித்த அனுயா, தற்போது புனேவில் வசித்து வருகிறார்.

சினிமாவில் இருந்து விலகிய அனுயா: கடந்த 9 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் உள்ளார் அனுயா. திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்ளிசிட்டிக்காகவே தன்னை குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அனுயாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் பல நடிகர்களுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் பரவிவரும் வதந்திகளுக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X