யாருங்க இப்படி கிளப்பி விடுறது.. நான் நல்லாருக்கேன்.. வதந்தியை நம்பாதீங்க..கடுப்பான அபர்ணா பாலமுரளி!

சென்னை: தன்னைப் பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகை அபர்ணா பாலமுரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி. பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரியானார். அதனை தொடந்து சர்வம் தாள மயம் என்ற படத்தில் நடித்தார் நடிகை அபர்ணா பாலமுரளி.

அபர்ணா பாலமுரளி உடல்நிலை

அபர்ணா பாலமுரளி உடல்நிலை

ஆனால் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மூலமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்தப் படத்தில் பொம்மி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதி?

மருத்துவமனையில் அனுமதி?

அதாவது, நடிகை அபர்ணா பால முரளிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் நடிகர்- நடிகைகள் பலரும் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.

கோபமான அபர்ணா பாலமுரளி

கோபமான அபர்ணா பாலமுரளி

ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவுகள் வெளியிட்டனர். உடல்நிலை வதந்திக்கு அபர்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது "நான் நலமாக இருக்கிறேன். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். உடல்நிலை பற்றி பரவி வரும் தகவல் உண்மையல்ல, அதை யாரும் நம்ப வேண்டாம்'' என்று கோபமாக தெரிவித்து உள்ளார்.

Recommended Video

Aparna Balamurali Theethum Nandrum நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்தது | Tamil Filmibeat
கைவசம் 7 படங்கள்

கைவசம் 7 படங்கள்

நடிகை அபர்ணா பாலமுரளி தமிழில் நடிகர் கார்த்தி மற்றும் அசோக் செல்வன் ஆகியோருடன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் மலையாள மொழியிலும் அடுத்தடுத்து 5 படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆடுஜீவிதம் என்ற படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X