கும்மிருட்டில்.. ஜம்முனு தெரியும் பொண்ணு.. அசத்தலான போட்டோஷூட்!
சென்னை : 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய திரைப்படங்களில் அபர்ணா பாலமுரளி நடித்து இருந்தாலும் சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு பல ரசிகர்கள் இவரின் பின்னால் பைத்தியமாக திரிகின்றனர்.
பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபர்ணா நிஜமான பொம்மியாகவே அதில் வாழ்ந்திருக்க சூர்யாவுக்கு இணையான சிறந்த நடிப்பை சூரரைப்போற்று படத்தில் கொடுத்திருப்பார்.
மலையாளத்திலும் பிரபலமாக நடித்து வரும் இவர் மீண்டும் தமிழில் மிகப் பெரிய திரைப் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், இப்பொழுது இருட்டில் ஜம்முனு போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருகிறார்.

பாடலையும் பாடியிருப்பார்
மலையாளத்தில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களின் மூலம் கலக்கி வரும் நடிகை அபர்ணா பாலமுரளி, பிரபல இசையமைப்பாளர் பாலமுரளியின் மகளாவார். பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருக்கின்ற நிலையில் தமிழில் முதல்முறையாக அறிமுகமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருப்பார்.

கவனிக்கப்படவில்லை
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா திரைப்படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு பரிச்சயமான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகப்படுத்தப்பட்டார். பின் சர்வம் தாளமயம் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் உடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் பலராலும் கவனிக்கப்படவில்லை.

எக்கச்சக்கமான ரசிகர்கள்
சமீபத்தில் சூர்யாவின் வெறித்தனமான நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் சூர்யாவுக்கு இணையாக நடிப்பிலும் பட்டையைக் கிளப்பி இருந்த அபர்ணாவின் நடிப்பை பார்த்த முன்னணி நடிகைகளே வாய்பிளந்து போயிருக்கும் நிலையில், இப்போது இவருக்கு தமிழிலும் எக்கச்சக்கமான ரசிகர்களும் கூடிப் போய் உள்ளனர்.

ஜம்முன்னு போட்டோ ஷூட்
சூரரைப்போற்று திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அபர்ணா பாலமுரளி தமிழில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அனைவரையும் கவரும் போட்டோ ஷூட்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் அபர்ணா இப்பொழுது இருட்டு அறையில் பவுர்ணமி போல ஜொலித்துக் கொண்டு நேர்த்தியான உடையில் ஜம்முன்னு உட்கார்ந்து இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதையடுத்து பலரும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











