ஆஹா கல்யாணம்.. மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்!

சென்னை: தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபர்ணா தாஸ் 1995ம் ஆண்டு செப்டம்பர் 10ந் தேதி பிறந்தார். கேரளாவில் உள்ள கங்கோத்ரி பள்ளியில் நடித்த இவர், கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் .இதையடுத்து ஒரு நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றினார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால், படித்துக்கொண்டு இருக்கும் போதே, பத்திரிகைகளுக்கு மாடலாகவும் இருந்துள்ளார்.

Malaiyala actress Aparna das and deepak parambol Got Married

அபர்ணாவின் டிக்டாக் வீடியோக்களில் ஒன்றைப் பார்த்த இயக்குநர், சத்யன் அந்திகாட்டின் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான நான் பிரகாஷ் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக மனோகரம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Malaiyala actress Aparna das and deepak parambol Got Married

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகார். இந்த படத்தில், சின்ன ரோலில் நடித்திருந்தாலும் அவரை ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக அப்படம் வெளியான போது, பூஜா ஹெக்டேவுக்கு பதில் இவரை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.

Malaiyala actress Aparna das and deepak parambol Got Married

பீஸ்ட் படத்தை தொடர்ந்து, கவின் நடித்த டாடா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படமாக அமைந்தது. காதலிக்கும் போது இருக்கும் ஈர்ப்பு திருமணத்திற்கு பின் தொலைந்துவிடுவதை இந்த படத்தில் ஒரு பாடமாக சொல்லப்பட்டு இருக்கும். இப்படத்தில் அபர்ணா, காதலி, மனைவி, அம்மா என ஒரே படத்தில் கன கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.

Malaiyala actress Aparna das and deepak parambol Got Married

காதல் திருமணம்: இந்நிலையில், நடிகை அபர்ணா மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இன்று கேரள பாரம்பரிய முறைப்படி எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அபர்ணா தாஸ் நடித்த 2வது படமான மனோகரம் படத்தில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த தீபக் பரம்பொல்லைகாதலித்த நிலையில், பெற்றோரிடம் காதலை சொல்லி இருவரும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய நிலையில், தற்போது அவரையே திருமணம் கொண்டார். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X