twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு

    பாலியல் தொல்லைகளை மறுக்க தெரிந்தால் போதும் தவிர்க்க முடியும் என செம பட நாயகி அர்த்தனா தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு- வீடியோ

    சென்னை: சினிமா மட்டுமல்ல எல்லாத் துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது இருக்கிறது. ஆனால் பெண்கள் அதற்கு நோ சொன்னால் மட்டுமே, அதனை தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் நடிகை அர்த்தனா.

    சமுத்திரக்கனியின் தொண்டன் படம் மூலம் தமிழில் தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா. அதன் தொடர்ச்சியாக வள்ளிகாந்த் இயக்கத்தில் வெளியான செம படம் மூலம் நாயகியானார்.

    தற்போது வெண்ணிலா கபடிக் குழு -2 படத்தில் நடித்து வரும் அர்த்தனா, திரைத்துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

    சினிமாவில் மட்டுமல்ல..

    சினிமாவில் மட்டுமல்ல..

    இது தொடர்பாக பேட்டியொன்றில் அவர் கூறியிருப்பதாவது, "அட்ஜெஸ்மென்ட் என்பது சினிமா துறையில் மட்டும் இல்லை...எல்லா ஃபீல்டுலயும் இருக்கு. எனக்கு இதுவரை அதுபோன்று நடந்ததில்லை.

    சம்மதம் இல்லாமல்..

    சம்மதம் இல்லாமல்..

    அதற்காக சினிமாவில் அட்ஜஸ்மென்டே கிடையாதுனு நான் சொல்லல. இருக்கலாம். பெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது வருத்தம்தான். அதேநேரம், உங்கள் சம்மதம் இல்லாம உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது.

    நோ சொல்லுங்கள்:

    நோ சொல்லுங்கள்:

    எப்படி நோ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும், இதைத் தவிர்க்க முடியும். நோ சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். இதைத் தாண்டித்தான் பெண்கள் முன்னேற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    கடைக்குட்டி சிங்கம்:

    கடைக்குட்டி சிங்கம்:

    கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சயீஷா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோருடன் 3 ஹீரோயின்களில் ஒருவராக அர்த்தனா நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    English summary
    Actress Arthana says that she hasn't experienced casting couch in her movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X