தம்பி அர்ஜுனா படப்பிடிப்பில் விபத்து... தீக்காயங்களுடன் தப்பிய நடிகை ஆஷிமா!

By Staff

Ashima
தம்பிக்கோட்டை படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தில், நடிகை ஆஷிமா காயங்களுடன் உயிர் தப்பினார்.

தம்பி அர்ஜுனா என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நாவலூர் கிராமத்தில் நடந்து வருகிறது.

ரமணா, பெரோஸ்கான், பிரவின்ராஜ் ஆகிய மூன்று பேரும் கதாநாயகர்களாகவும், ஆஷிமா கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். படத்தின் உச்சக்கட்ட காட்சியில், ஆஷிமா எரியும் நெருப்புக்குள் சிக்கிக்கொள்வது போலவும், அதில் இருந்து அவரை ரமணா காப்பாற்றுவது போலவும் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதற்காக ஆஷிமாவை சுற்றி மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஆஷிமாவின் உடையில் தீப்பற்றிக்கொள்ள அவர் சத்தம்போட்டு கதறி அழ ஆரம்பித்தார்.

உடனே கதாநாயகன் ரமணா, இயக்குநர் விஜய் ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல் மிராக்கிள் ஆகியோர் பாய்ந்து சென்று ஆஷிமாவை கோணிப் பையினால் போர்த்தி வெளியே இழுத்து வந்தார்கள். என்றாலும் ஆஷிமாவின் இரண்டு கால்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக முகத்தில் ஒன்றும் ஆகவில்லை.

உடனடியாக ஆஷிமா அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக தம்பி அர்ஜுனா படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

--

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X