ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் !

சென்னை : சில படங்களே நடித்திருந்தாலும் தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஆஷ்னா சவேரி.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என அடுத்தடுத்த திரைப்படங்களில் தமிழில் நடித்து வரும் இவர் அடுத்து நடிகர் கலையரசன் உடன் டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

விமலுடன் இணைந்து நடித்த "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" திரைப்படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சியில் வந்து காட்சியளித்து ஆஷ்னா இப்பொழுது ஸ்லீவ்லெஸ் சட்டையில் கொஞ்சூண்டு கவர்ச்சி தெரிய செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டும் வருகிறார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

தமிழில் வெளியாகும் பல திரைப்படங்கள் இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்று வரும் நிலையில் இயக்குனர் ராஜமவுலியின் திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுவருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தெலுங்கு காமெடி நடிகர் சுனில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்த மரியாதை ராமண்ணா 2010ஆம் ஆண்டு வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளிய நிலையில் அந்த திரைப்படம் தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது

ஹீரோ இமேஜை பெற்றார்

ஹீரோ இமேஜை பெற்றார்

முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருந்த சந்தானம் கதாநாயகனாக சில திரைப்படங்களில் நடித்து காமெடியிலும் கலக்கி வர வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் இவருக்கு ஹீரோ இமேஜை பெற்று தந்தது மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் ஆஷ்னா ஜவேரி தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

சந்தானத்தின் இயல்பான காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என பக்கா கமர்சியல் என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆஷ்னாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் வந்ததைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படித்தான் திரைப்படத்தில் நடிக்க அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

டபுள் மீனிங் வசனங்கள்

டபுள் மீனிங் வசனங்கள்

மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம் மற்றும் நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வந்த ஆஷ்னா அதுவரை இலை மறை காய் மறைவாக கவர்ச்சி காட்டி வந்தவர் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படத்தில் எதிர் பாராத அளவுக்கு எக்கச்சக்கமான சர்ச்சைக்குரிய காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள் என கவர்ச்சி கன்னியாகவே மாறிவிட்டார்.

கவர்ச்சியாக மாறினார்

கவர்ச்சியாக மாறினார்

கவர்ச்சி காட்ட ஆரம்பித்தால் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து கொண்டிருந்த ஆஷ்னாவுக்கு இப்போது கைவசம் டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்ற திரைப்படம் மட்டுமே இருக்க,சமூக வலைதளங்களில் இவரின் பல புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.

க்யூட்டான போஸ்

க்யூட்டான போஸ்

அந்த வகையில் இப்பொழுது ஸ்லீவ்லெஸ் டெனிம் ஷார்ட்டில் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு, கொஞ்சூண்டு முன்னழகு கவர்ச்சி தெரிய செம க்யூட்டான ஸ்டைலில் போஸ் கொடுத்துக் கொண்டிருக்க இன்றும் இளமை மாறாமல் அதே கொள்ளை அழகுடன் க்யூட்டான லுக்கில் இருக்கும் ஆஷ்னாவை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் வயசு ஆகவே ஆகாதா எனக் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X