லாக்டவுனில் செம ஒர்க் அவுட்.. சந்தானம் பட நாயகியின் வேறலெவல் புகைப்படம் !
மும்பை : ஆஷ்னா சவேரி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து நடித்த ஆஷ்னா , வீட்டில் இருக்கும் நேரங்களில் வித விதமாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிடுகிறார் .
அடிக்கடி ரசிகர்களுக்கு காட்சி கொடுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவுகின்றது . அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் தனக்கு என ஒரு தனி பாணியிலேயே இருக்கிறார் ஆஷ்னா .

சந்தானம் காம்போ
கிண்டலுக்கும், நக்கலுக்கும் பேர் போனவர் தான் சந்தானம் இவருடன் இணைந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் அறிமுகம் ஆன ஆஷ்னா . இனிமே இப்படித்தான் , மீன் குழம்பும் மண் பானையும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு சரியான பெயரை கொடுக்கவில்லை . அதனால் சரியான வெற்றிக்காக காத்து கொண்டு இருக்கிறார் .

கட்டுக்கோப்பான உடல்
இந்த ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் அனைத்து நடிகைகளும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள பெரும் அளவில் மெனக்கெடுகின்றனர். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருப்பதால் குண்டாகிவிடுவோமோ என்ற பயத்தில் இருக்கின்றனர், ஒல்லியாகவே இருந்தாலும் மேலும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பாதுகாத்து கொண்டு வருகின்றனர்.

உடற்பயிற்சியும் தெரியும்
அந்த வகையில் பல படங்கள் நடித்தும் சரியான வெற்றிக்காக பெரும் அளவில் மெனக்கெடுகிறார் ஆஷ்னா. பலவிதமான யோகாக்களும் , விதவித மான உடற்பயிற்சிகளும் செய்து தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். இவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.

கையில் அரிசி மூட்டை
வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத காரணத்தினால் உடற்பயிற்சி சாதனங்கள் ஏதும் இல்லாமல், தனது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அதாவது அரிசி மூட்டையை வைத்து உடற்பயிற்சி செய்து வருகிறார் நமது ஆஷ்னா. பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருக்கும் இவர் பல பல உடற்பயிற்சி மற்றும் யோகா போஸ்களை செய்து மிரட்டி வருகிறார்.

தலைகீழ் உடற்பயிற்சி
இவர் வெளியிட்டுள்ள அனைத்து உடற்பயிற்சி புகைப்படங்கள் பெரும்பாலும் தலைகீழாகவே நிற்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்ஸ் தந்து வருகின்றனர். இவர் டைட்டானிக் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . டைட்டானிக் படத்தில் ஆஷ்னா மற்றும் கயல் ஆனந்தி இருவரும் குறும்புத் தனமாக நடித்துள்ளனர். இரண்டு நடிகைகளும் செய்யும் பல சேட்டைகள் டைட்டானிக் படத்தில் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலவிதமான கவர்ச்சி போஸ்கள் கொடுக்கும் ஆஷ்னா சவேரி டைட்டானிக் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவர் மட்டும் இல்லாமல் இவரது ரசிகர்களும் டைட்டானிக் படத்தின் வெற்றிக்காகவே காத்துக்கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











