தண்ணி அடிக்கிறதை நான் ஏங்க மறைக்கணும்? அதுயென்ன கொடூரக் குற்றமா? கேட்கிறார் ஹீரோயின்!

By

கொச்சி: குடிப்பதை நான் ஏன் மறைக்க வேண்டும் என்றும் அது என்ன கொடூரக் குற்றமா? என்றும் கேட்டுள்ளார் பிரபல நடிகை.

Recommended Video

Soorarai Pottru Release | Vishal Chakra Fight Scene Making | May 1 Thala Birthday

மலையாள நடிகை, வீணா நந்தகுமார். மும்பையை சேர்ந்த இவர் ஆசிப் அலி ஜோடியாக நடித்த, கெட்டியோளனு என்ட மலகா (Kettiyolanu Ente Malakha) என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

இதற்கு முன், கடம் கதா, ககுல்தாலியே கோழிபோரு ஆகிய மலையாளப் படங்களில் இவர் நடித்துள்ளார்.

கல்பா ரெண்டு பெக்

கல்பா ரெண்டு பெக்

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியின்போது, 'நான் ரொம்ப பேசணும்னா, கல்பா ரெண்டு பெக் போடணும். அப்படின்னா நல்லா பேசிட்டே இருப்பேன். ஓவராவும் பேசுவேன். ரெண்டு பெக்குக்கு மேல முடியாது. என்னோட கெப்பாசிட்டி அவ்வளவுதான். இப்பலாம் உடம்பு தாங்க மாட்டேங்குது' என்று பேசி அதிர்ச்சிக் கொடுத்திருந்தார்.

ரசிகர்கள் ட்ரோல்

ரசிகர்கள் ட்ரோல்

இதையடுத்து இவரை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். இதற்கு இப்போது பதில் அளித்துள்ள வீணா நந்தகுமார், குடிப்பதை நான் ஏன் மறைக்கணும்? அதை சொல்ல ஏன் நான் பயப்படணும்?' என்று கேட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'மது குடிக்கிறது என்ன கொடூரக் குற்றமா? நான் பீர் குடிப்பேன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஏன் கிண்டல் பண்ணணும்?

ஏன் கிண்டல் பண்ணணும்?

என்னைப்போல வயதுள்ள பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. பீர் மேல இருக்கிற என் காதலை சொல்றதுல நான் எப்பவும் வெட்கப்பட்டதே இல்லை. நான் சொன்னதை தவறாகப் புரிஞ்சுகிட்டு, என்னை ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். ஏன் கிண்டல் பண்ணணும்? அவங்க செய்றது சரியா தவறாங்கறதை முதல்ல அவங்க சரி பார்க்கட்டும்.

கட்டுப்பாடு இல்லை

கட்டுப்பாடு இல்லை

அப்புறம் சினிமாவைப் பொறுத்தவரை எந்த மாதிரி கேரக்டர்கள்ல நடிக்க முன்னுரிமை கொடுப்பீங்க?ன்னு கேட்கிறாங்க. நல்ல கதைன்னா நடிப்பேன். இப்படிதான் நடிக்கணும், இந்த கேரக்டர்லதான் நடிக்கணும்னு எந்த கட்டுப்பாடும் வச்சுக்கிறதில்லை. கிளாமர் கதைனாலும் நடிப்பேன். நல்ல கதைக்காக எதையும் செய்ய தயாரா இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் வீணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X