தீவுத் திடலில் பொருட்காட்சி... தொடங்கி வைத்தார் நடிகை அதிதி மேனன்!

By Shankar

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நடத்தக்க வருகிறது. இந்த வருட 43வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தினாலும், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களினாலும் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த வருட பொருட்காட்சி FUN WORLD & RESORTS INDIA PVT. LTD என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பொருட்காட்சியில் அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி முதன்முறையாக சென்னையில் இடம் பெற்றுள்ளது.

Actress Athithi Menon inaugurates 43rd exhibition

இதனை கடந்த மாதம் வெளிவந்த பட்டதாரி படத்தின் கதாநாயகி அதிதி மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவர் ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகும் 'சந்தன தேவன்' படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். நிகழ்ச்சியில் புழல், திருட்டு விசிடி படங்களின் நாயகன் மனோவும் பங்கேற்றார்.

Actress Athithi Menon inaugurates 43rd exhibition

பொருட்காட்சியில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.25/- ம் சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூபாய் 15/- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Actress Athithi Menon inaugurates 43rd exhibition

இப்பொருட்காட்சி 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X