Just In
- 17 min ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 1 hr ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 1 hr ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 1 hr ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
கள்ளக்காதல் மோகம்.. இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜோடி!
- Sports
3 முக்கிய வீரர்கள்.. இதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே!
- Finance
தங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்.. அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படம்!
சென்னை : இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார்.
சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் இதுவரை காட்டாத அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி, மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி அனைவரையும் அசர வைத்த அதுல்யா இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற வித்தியாசமான காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்று இந்தியா முழுவதும் பல பிரபலங்களால் பிரபலமாக்கப்பட்டது. இப்பொழுது தமிழ் நடிகைகளிடையே மற்றுமொரு சேலஞ்ச் துவங்க நடிகை அதுல்யா மயக்கும் மூக்குத்தி அணிந்து கொண்டு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

செடிகளை நட்டு
சில மாதங்களுக்கு முன்பு கிரீன் இந்தியா சேலஞ்ச் இந்திய அளவில் ட்ரண்டாகி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரும்பான்மையான நடிகர் நடிகைகள் தங்களது வீடுகளில் செடிகளை நட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சேலஞ்சை வெற்றிகரமாக நடத்தி அனைவரின் பாராட்டுகளை பெற்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்
இதில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் நடக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் க்கு கிரீன் இந்தியா சேலஞ்சை செய்து காட்டும்படி சவால் கொடுக்க அதை ஏற்றுக் கொண்ட விஜய் வீட்டுத் தோட்டத்தில் ஒரு செடியை நட்டு அந்தப் புகைப்படம் இன்டர்நெட்டில் பகிர அது வேற லெவல் வைரலாகி இணைய தளத்தை தெறிக்கவிட்டது.

புதிய சேலஞ்ச்
இவ்வாறு பல சேலஞ்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது முளைத்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை மையமாகக் கொண்டு இப்பொழுது புதிய சேலஞ்ச் ஒன்று உருவாகியுள்ளது.

மினுக்கும் மூக்குத்தி
அதாவது கிரீன் இந்தியா சேலஞ்ச் எப்படி செடிகளை நட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டுமோ அதேபோல மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் வரும் நயன்தாராவைப் போல மினுக்கும் மூக்குத்தி ஒன்றை அணிந்து கொண்டு அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

அட்டகாசமான லுக்கில் அதுல்யா
இவ்வாறு மூக்குத்தி அம்மன் சேலஞ்ச் இப்பொழுது தமிழ் நடிகைகள் இடையே பிரபலமாகி வரும் நிலையில், அதில் நடிகை அதுல்யா வைரம் போன்று மினுக்கும் மூக்குத்தி ஒன்றை அணிந்து கொண்டு அட்டகாசமான லுக்கில் பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை வெளியிட்டதோடு அதில் நடிகை இந்துஜா, ஆர் ஜே பாலாஜி, மற்றும் ஸ்மிர்தி வெங்கட் உள்ளிட்டோருக்கு மூக்குத்தி அம்மன் சவாலை செய்து காட்டும்படி சவால் ஒன்றை விடுத்திருக்கிறார். நடிகை வாணி போஜன், மேகா ஆகாஷ், விஜே பார்வதி, ஆத்மிகா என பலரும் இந்த சேலஞ்சை செய்து காட்டி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதையடுத்து இப்பொழுது கோலிவுட்டில் மூக்குத்தி அம்மன் சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது.