கையில் சரவெடியோடு போஸ்.. மத்தாப்பூ சிரிப்பு அழகி அதுல்யாவின் தீபாவளி ஃபோட்டோஷூட்.

சென்னை :நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் வெடி வெடித்து இனிப்புடன் கொண்டாடிய சமயத்தில் மத்தாப்பூ போல் அதுல்யா ரவி கையில் சரவெடியோடு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சியில் கலக்கி வரும் நிலையில் தனது அழகான சிரிப்பில் இளைஞர்களை சுண்டி இழுத்த நடிகை அதுல்யா ரவி. 25 வயதில் சும்மா தங்க சிலை போல் இருக்கும் இவர் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர்.

வால்வாடி காதல் என்ற குறும்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் அதுல்யா ரவி.

அழகிய அறிமுகம்

அழகிய அறிமுகம்

நாயகன் மற்றும் நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களின் நடித்துள்ளார் .காதல் கண்கட்டுத்தே படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பேச பட்டார் அதுல்யா.அழகில் மயங்கிய இளைஞர்கள் அதுல்யாவை கனவு கன்னியாக பார்த்து ரசித்தனர்.

கனவுக்கன்னி

கனவுக்கன்னி

"ஏமாலி" என்ற திரைப்படத்தில் கவர்ச்சியின் உச்சத்தை காட்டிய அதுல்யா ரவி ஒரு கையில் சிகிரெட் மறு கையில் பீர் பாட்டில் என வந்ததை பார்த்த இளைஞர்கள் மிரண்டு விட்டனர் . பின்பு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற திரைப்படத்திலும் கவரச்சியாக நடித்தார் அதுல்யா.

சோசியல் மீடியாவில் பிஸி

சோசியல் மீடியாவில் பிஸி

தொடர்ந்து டபுள் மீனிங் வசனம் அரைகுறை ஆடையோடு நடித்த அதுல்யா ரவிக்கு இது வேண்டாத வேலை என்ற மக்கள் விமர்ச்சித்தனர் லவ் ,ரொமான்ஸ் , கிளாமர் என நடித்த அதுல்யா சோஷியல் மீடியாவில் தனது புகைப்படத்தை தினமும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதை பார்க்கும் இளைஞர்கள் மனம் உருகி, சோசியல் மீடியாவில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள் எப்போ அதுல்யா ரவி புகைப்படம் வெளியிடுவார் என்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டது .

அழகு அதுல்யா

அழகு அதுல்யா

சமீபகாலமாக அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் அதுல்யா,தீபாவளி பண்டிகையையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி உள்ளார்.தற்போது பார்ப்பவர்கள் கையெடுத்து கும்பிடும் வகையில் பட்டு புடவை கட்டி முகம் முழுவதும் புன்னகையோடு கையில் சரவெடியோடு போஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்தார். தனது ரசிகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லிய அதுல்யா ரவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X