ஒய்ட் ட்ரெஸ்ஸில் தேவதை போல ஜொலிக்கும் அதுல்யா... குவியும் லைக்குகள்!
சென்னை: நடிகை அதுல்யா தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டும் நடித்து மிகச் சிறந்த நடிகை என ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்
இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடைசி சில படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடித்து வருகிறார்..
சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்பொழுது தேவதைப் போல ஜொலிக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்

மற்ற மொழி படங்கள் எதிலும் நடிக்கவில்லை
தமிழ் சினிமாவின் க்யூட் நடிகை என ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகை அதுல்யா இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் இப்பொழுது மிக பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து தமிழில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் இதுவரை மற்ற மொழி படங்கள் எதிலும் நடிக்கவில்லை

திடீரென கவர்ச்சிக்கு மாறி ஷாக் கொடுத்தார்
ஏமாலி,நாடோடிகள் 2, உள்ளிட்ட படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அதுல்யா ரவி ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி திரைப்படத்தில் கவர்ச்சிப் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் . திடீரென கவர்ச்சிக்கு மாறிய அதுல்யா ரவியை பார்த்து ரசிகர்கள் பெரும் வியப்பில் இருக்க அடுத்து நடிக்கும் திரைப்படங்களிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்

காமெடி ஜானரில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ்
லிப்ரா புரொடக்ஷன் சார்பில் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக வெளியானது. கலாட்டா கல்யாணத்தை கதைக் களமாகக் கொண்டு காமெடி ஜானரில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதிலும் அதுல்யாவின் நடிப்பும் கவர்ச்சியும் அதிக அளவில் பேசப்பட்டது
Recommended Video

வெள்ளை உடையில் தேவதை போல
இவ்வாறு படங்களில் வர வர அதிக கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகை அதுல்யா சமூக வலைதளங்களிலும் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இப்பொழுது வெள்ளை உடையில் தேவதை போல காட்சியளிக்கும் செம க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











