மேகமா.. அதுல்யாவா.. எது அழகு.. அடடா ரசிகர்களே குழம்பிப் போய்ட்டாங்களே!

சென்னை : மேக மூட்டங்களை பார்த்து உற்சாகத்துடன், துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் காணொளியை அதுல்யா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

Recommended Video

Actress Challenge | Losliya, Simbran Tik Tok, Reba John, Athulya Ravi | Lock down diaries

அதுல்யா நாயகியாக தமிழ் சினிமாவில் தன்னை பதிவு செய்த முதல் படத்தில் இருந்த சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வரும் காரணத்தினாலே இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றனர்

 Actress athulya ravi has shared a video on instagram

அதுல்யா போடும் ஒவ்வொரு பதிவும் சமீபகாலமாக தொலைகாட்சி செய்திகளில் வரும் அளவிற்கு டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக லாக்டவுன் அறிவித்த பின் அதுல்யா தன் வீட்டில் இருந்த படியே செய்த சேட்டைகளை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட அனைத்து வீடியோக்களும் மிக பெரிய அளவில் வைரலானது .தற்போது 2019ல் நடந்த ஒரு படப்பிடிப்பு தளத்தில் எடுக்க பட்ட தனது காணொளியை பகிர்ந்து இருக்கிறார் .

இந்த காணொளியில் மேகமூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இயற்கை அழகை ரசித்த படி துள்ளி குதித்து ஓடி வருகிறார் நடிகை அதுல்யா. இந்த காணொளியில் அதுல்யா எப்போதும் போல தன் சிறந்த வெட்கம் கலந்த புன்னகையுடன் இளைஞர்களின் இதயத்தையும் கொள்ளையடித்து போகிறார்.

இந்த காணொளியிலே அதுல்யா, இந்த வீடியோ 2019ல் படபிடிப்பில் எடுத்தது என்றும் படப்பிடிப்புகளை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார் மேலும் 2020ன் மோசமான விஷயம் இந்த கொரோனா என்றும் வீட்டில் இருந்த படியே நாம் ஒன்றாக இதை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

 Actress athulya ravi has shared a video on instagram

இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் இந்த காணொளியில் அதுல்யா மிகவும் அழகாக இருப்பதாகவும் வலிந்த படி புகழ்ந்து வருகின்றனர் மற்றும் அதுல்யாவை இந்த காணொளியில் பார்க்க தேவதை போல் உள்ளீர்கள் என்றும் புகழ்ந்து வருகின்றனர் மேலும் இயற்கையை விட அதை ரசிக்கும் அதுல்யா தான் அழகு என்று கூறி வருகின்றனர் .

 Actress athulya ravi has shared a video on instagram

அதுல்யாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் பதினாறு லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள் .தமிழின் உச்ச நடிகைகள் என்று சொல்ல கூடிய சிலருக்கே இந்த அளவுக்கான சமூக வளைத்தல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுல்யாவின் தற்போதைய பதிவும் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது .இதன் மூலம் தெளிவாக தெரிவது அதுல்யா சமூக வலைதளங்களில் மிகவும் அதிகபடியான ரசிகர்களை வைத்திருப்பது எந்த விதத்திலும் பட வாய்ப்புகளை குறைக்காது என்பது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X