கடவுளே நிறைய பட வாய்ப்பு வரனும்... கண்ணை மூடி பிரார்த்தனை செய்த அதுல்யா !
சென்னை : மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில், நடிகை அதுல்யா ரவி மனஉருகி பிரார்த்தனை செய்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் இவர் புகைப்படங்களை வெளியிட்டாலே அது வேறலெவலில் டிரெண்டாகி விடும். அந்த அளவுக்கு அதுல்யா ரவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் இவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ரசிகர்களுக்காக புதிய புதிய போட்டோஷூட்களை நடத்தி போஸ்ட்களை போட்டு வருகிறார்.

அதுல்யா ரவி
கோலிகுண்டு கண்ணழகி, கன்னக்குழி அழகி என கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் அதுல்யா ரவி. கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் பால்வாடி காதல் என்ற குறும்படம் மூலமாக நடிகையாக மாறினார். இதையடுத்து 2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

பல படங்களில்
முதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்றாலும், இவரின் எடுப்பான அழகால் இளசுகளில் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து, ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கிளாமருக்கு மாறினார்
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த அதுல்யா ரவி தனது ரூட்டை கிளாமர் பக்கம் அப்படியே திருப்பினார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி மற்றும் சமீபத்தில் சாந்தனு மற்றும் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

பக்தி பழமாக
இந்நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு கண்களைமூடி பக்தி பழமாக மாறி உள்ளார் அதுல்யா ரவி. இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், என்ன அதுல்யா பட வாய்ப்பு வரவேண்டும் என்று பிரார்த்தனையா என வேண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











