புடவை கட்டுனத கூட ஏத்துக்கலாம்.. அதுக்கு ஒரு பெல்ட் போட்ட பாத்தியா.. அதுல்யா ரவியின் அலப்பறை!

சென்னை: இணையத்தில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் அதுல்யா ரவி, விதவிதமான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காதல் கண் கட்டுதே படத்தில் க்யூட்டாக அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா. அந்த படத்தில் இவரின் வசீகரமான கோலிகுண்டு கண்ணைப் பார்த்தே பல இளசுகள் அவுட்டாகிப் போனார்கள். முதல் படத்திலேயே பேமஸான அதுல்யா ரவி, ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

Actress Athulya Ravi New year special photoshoot trending on social media

மீட்டர் என்கிற படத்தின் மூலம் டோலிவுட் பக்கம் சென்ற அதுல்யா ரவி தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக டீசல் என்கிற படத்தில் நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகை அதுல்யா ரவி: தற்போது அதுல்யா ரவிக்கு கைவசம் எந்த படமும் இல்லாததால், ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதுல்யா, வெர்ஜினிடியை இழக்க சரியான வயது எது? என்ற கேள்விக்கு, என்னை பொறுத்தவரை 21 வயது முதல் 25 வயது தான் இதற்கு சரியான வயது என்று நான் நினைக்கிறேன் என்றார். இதையடுத்து, திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது சரியா..? அல்லது திருமணத்திற்கு பிறகு உடலுறவு கொள்வது சரியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அதுல்யா, திருமணத்திற்கு பிறகான உடலுறவு என்பது நம்முடைய கலாச்சாரம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும்.

Actress Athulya Ravi New year special photoshoot trending on social media

தனிப்பட்ட விருப்பம்: ஆனால் மாறிவரும் கால சூழ்நிலையில் பலரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். அது ஒவ்வொரு தனிப்பட்டவரின் முடிவு. அதில், மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே சமயம், நம்முடைய கலாச்சாரத்தின் படி இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும் என்று பதில் அளித்திருந்தார். அதுல்யா ரவியின் இந்த தெளிவான பதில் இணையத்தில் பலரின் பாராட்டுகளை பெற்றது.

Actress Athulya Ravi New year special photoshoot trending on social media

புடவை கட்டுனத கூட ஏத்துக்கலாம்: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி, ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், லைட் நீல நிறத்தில் விதவிதமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, ஆசீர்வாதத்துடன் 2024 இல் நுழைகிறேன். இந்த ஆண்டு நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மிகப்பெரியதாக இருக்கும்! அனைத்து அன்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் புடவை கட்டுனத கூட ஏத்துக்கலாம்.. அதுக்கு ஒரு பெல்ட் போட்ட பாத்தியா.. இங்க தான் நீ நிக்குற என்று அவரின் போட்டோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X