Don't Miss!
- News
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: ஒரே நாளில் 1,757 பேர் மரணம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுல எது "பெட்"டுன்னு தெரியலயே.. இரண்டுமே க்யூட்டா இருக்கே!
சென்னை : காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி.
அடுத்த சாட்டை, நாடோடிகள் 2,கேப்மாரி போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் இவர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி...6 பதக்கங்களை வென்று அசத்திய அஜித்
தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியிடும் பல க்யூட்டான புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வந்த நிலையில் இப்போது வெள்ளை கிளியுடன் எடுத்துக்கொண்ட சில க்யூட்டான புகைப்படங்கள் இணைய தளத்தை ஆக்கிரமித்துள்ளது.

கவனமாக தேர்ந்தெடுத்து
நடிகை அதுல்யாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முதல் படத்திலேயே செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக இருக்க, திரைப்படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஹோம்லி லுக்
காதல் கண் கட்டுதே மூலம் அறிமுகமானவர் பிறகு இளம் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து, சிறந்த நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த இவருக்கு இப்பொழுது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஹோம்லி லுக் மற்றும் கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்தவர் இப்பொழுது கவர்ச்சி காட்டுவதற்கு பச்சைக்கொடி காட்டி கேப்மாரி படத்தில் பலரும் அசந்து போகும் அளவுக்கு கிளாமரில் அதகளம் செய்திருந்தார்.

ட்ரெண்ட் ஆனது
இப்பொழுது இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுல்யா ரவி மற்றும் சாந்தனு பாக்யராஜ் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. லிப்ரா புரொடக்ஷன் சார்பில் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகி இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் முதல் பாடல் "ஏதோ சொல்ல " வெளியிடப்பட்டு அனைவரையும் கவர்ந்து ட்ரெண்ட் ஆனது.

இரண்டுமே க்யூட்டா இருக்கே
இவர் சமூக வலைதளங்களில் வெளிவிடும் பல புகைப்படங்கள் வைரல் ஆனதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதைத் தொடர்ந்து இப்பொழுது செல்லக்கிளி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தை கலக்குகிறது. வெள்ளை கிளியுடன் வெள்ளை நிற டீசர்ட் அணிந்து கொண்டு இருவரும் மேட்சிங் மேட்சிங்காக இருக்க வெள்ளை கிளியை தனது தோள் பட்டையில் உட்கார வைத்துக் கொண்டு செல்லமாக கொஞ்சியவாறு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதுல எது பெட்டுன்னு தெரியலயே இரண்டுமே க்யூட்டா இருக்கே என வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.