கண்ணடித்து இளசுகளை வம்பிழுக்கும் அதுல்யா… சேலையில வீடுகட்டவா என வர்ணிக்கும் ரசிகர்கள் !

சென்னை : படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கும் வெகு சில நடிகைகளில் மிக முக்கியமான இளம் நடிகை அதுல்யா ரவி.

தமிழில் பெரும் இளைஞர் கூட்டத்தை ரசிகர்களாக கொண்டுள்ள இவர் இப்போது முதன்முறையாக சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப கதாபாத்திரம் கவர்ச்சி கதாபாத்திரம் என இரண்டிலும் கலக்கி வரும் அதுல்யா இப்பொழுது சேலையில் கண்ணடித்தவாறு இளசுகளை வம்பிழுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

புரமோட் செய்யப்பட்டார்

புரமோட் செய்யப்பட்டார்

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தின் மூலம் ஹோம்லி ஹீரோயின் என்ற பெயரில் வலம் வந்த கவர்ச்சி ஹீரோயின் என புரமோட் செய்யப்பட்டார்.

கிளாமர் நடிப்பின்

கிளாமர் நடிப்பின்

பார்க்க செம க்யூட்டாக இருக்கும் அதுல்யா கேப்மாரி திரைப்படத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு பல இரட்டை அர்த்த வசனங்கள் படுக்கையறை காட்சிகள் என பார்ப்போர் அனைவரையும் கிளாமர் நடிப்பின் மூலம் அதிர வைத்திருந்தார்.

வாய்ப்புகள் குவிந்து

வாய்ப்புகள் குவிந்து

அதுல்யா குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார் என நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் இது அதிர்ச்சி அளித்த நிலையில் தான் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்று சொல்லாமல் சொல்லி இருக்கும் அதுல்யாவிற்கு இப்பொழுது வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தந்தை வழியிலேயே

தந்தை வழியிலேயே

தமிழ் சினிமாவில் முருங்கக்காய் என்றாலே அனைவருக்கும் பாக்யராஜ் நினைவுக்கு வரும் நிலையில் அவரது மகன் சாந்தனு இப்பொழுது தந்தை வழியிலேயே முருங்கக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ்

முருங்கைக்காய் சிப்ஸ்

சாந்தனு பாக்யராஜ், அதுல்யா இருவரும் முதன் முறையாக இணையும் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இளம் ஜோடியாக இருவரும் நடித்திருக்க இந்த திரைப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகி வருகிறது.

சேலையில் கிறங்க

சேலையில் கிறங்க

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து பெயரிடப்படாத சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அதுல்யா கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் அந்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் படு பயங்கரமாக பல போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வரும் அதுல்யா இப்போது சேலையில் வந்து கிறங்க வைத்துள்ளார்.

இளசுகளை வம்பிழுக்கும்

இளசுகளை வம்பிழுக்கும்

அதுல்யாவின் க்யூட்டான பார்வைக்கே இங்கு பல கோடி ரசிகர்கள் ஏங்கிக் கிடக்க இப்பொழுது அம்சமான சேலையில் நீட்டி நெளித்து கண்ணடித்து இளசுகளை வம்பிழுக்கும் இந்த செமயான சேலை புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் சிலர் " சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க" என ருசிகரமாக பாடியும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X