பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை..அட பாலிவுட் ஹீரோயின் போல இருக்காங்களே?இனியாவது பட வாய்ப்பு வருமா?
சென்னை : பட வாய்ப்புக்காக பிரபல நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆளே அடையாளம் தெரியாதபடி மாறி உள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி, குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமானார்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தனது திறமையான நடிப்பால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.

அதுல்யா ரவி
தமிழ் சினிமாவில் கோலிகுண்டு கண்ணழகி என பெயர் எடுத்தவர் அதுல்யா ரவி. இவர் நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் வெளியாக தாமதமானதால்,காதல் கண்கட்டுதே அதுல்யாவின் முதல்படமாக அமைந்தது. இந்தப படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அதுல்யா ரவி ஏமாளி,சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் பிஸி
தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு படவாய்ப்பு வராததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார் அதுல்யா. படங்கள் இல்லாததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து தனக்குனு ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டார்.

ஓவர் கவர்ச்சி
இதையடுத்து, சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்தார். படத்தின் பெயருக்கு ஏற்றமாதிரி இந்த படத்தில் விவகாரமான பல சீன்களில், அதுல்யா ரவி,கவர்ச்சியை வாரிஇறைத்து நடித்திருந்தார். என்னத்தான் படத்தில் கவர்ச்சி ஓவரா இருந்தாலும், கதை இல்லாததால், படம் சுமாராக ஓடியது. இதையடுத்து சமீபத்தில் வெளியான வட்டம், கடாவர் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னச்சின்ன கேரக்டரில் கிடைத்த ரோலில் நடித்து வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி
இந்நிலையில், அதுல்யா ரவி எப்படியாவது பட வாய்ப்பை பெற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது மூக்கை மாற்றியுள்ளார். ஹோம்லி லுக் முகம் என்பதால், தான் படவாய்ப்பு தரவில்லை என நினைத்த அதுல்யா, ஒட்டு மொத்தமாக லுக்கை மாற்றி பாலிவுட் நடிகை போல இருக்கிறார். எது எப்படியோ அம்மணிக்கு இனிமேலாவது படவாய்ப்பு வந்தால் சரி.


Click it and Unblock the Notifications











