பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு... நீதிமன்றத்தில் நடிகை ரம்யா நம்பீசன் வாக்குமூலம்
கொச்சி: பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகை ரம்யா நம்பீசன் நேற்று வாக்குமூலம் அளித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையாதாகக் கூறி, நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர்.

திலீப் மனு தள்ளுபடி
85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முடிக்கவேண்டும்
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்துவருகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை
இதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் கேரளாவில் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்த வழக்கில் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தினமும் ஒருவர் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கை சினிமா துறையினர் உட்பட பலரும் அவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் அவர் குடும்பத்தினரும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துவிட்டனர்.

ரம்யா நம்பீசன்
இந்தச் சாட்சியம் பூட்டிய அறைக்குள் ரகசியமாக நடந்தது. இதையடுத்து, நடிகரும் இயக்குனருமான லால், தனது மனைவி, தாய் மற்றும் மருமகளுடன் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து நடிகை ரம்யா நம்பீசன் நேற்று தனது சகோதரருடன் சென்று வாக்குமூலம் அளித்தார். பாதிக்கப்பட்ட நடிகையும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











