எனக்கு உங்க கூட தான் ஷூட் பண்ணனும்.. அடம்பிடிக்கும் பிரபல நடிகை!
மும்பை : ஆதித்ய வர்மா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பனிதா சந்து எனக்கு உங்க கூட தான் ஷூட் பண்ணனும் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு கொரானா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியதோடு பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்ல அடம்பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு சர்தார் உதம் சிங் படத்தில் நடித்து வரும் இவர் முண்டா பனியனுடன் படுகவர்ச்சியாக உட்கார்ந்துகொண்டு எனக்கு உங்க கூட தான் ஷூட் பண்ணனும் என அடம் பிடித்து வருகிறார்.

அக்டோபரில் கதாநாயகியாக
இளம் வயதிலேயே நடிகையான பனிதா சந்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளவர். பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் திகட்டாத காதல் திரைப்படமாக வெளியான அக்டோபரில் கதாநாயகியாக நடித்து பாலிவுட் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதை அடுத்து தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பிரபல தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அதை முதலில் இயக்குனர் பாலா இயக்கி வந்தார். ஆனால் அந்த வெர்ஷன் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை என தூக்கி கிடாசி விட்டு மீண்டும் அதனை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குனரின் உதவியாளரை கொண்டு உருவாக்கப்பட்டு ஆதித்ய வர்மா என பெயர் வைக்கப்பட்டுள்து.

ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் அதில் பனிதா சந்து கதாநாயகியாக நடித்து தமிழுக்கும் அறிமுகமானார். தெலுங்கு அர்ஜுன் ரெட்டி போலவே அச்சு அசலாக அப்படியே உருவாக்கப்பட்டிருந்த ஆதித்ய வர்மா இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டடித்தது.

எனக்கு உங்க கூட தான் ஷூட்
நடித்த முதல் படத்திலேயே எக்கச்சக்கமான கவர்ச்சி காட்சிகளில் அதகளம் செய்திருந்த பனிதா சந்து சமூக வலைதளங்களில் சொல்லவே தேவையில்லை கண்கள் கூசும் அளவிற்கு எக்கச்சக்கமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கூலாக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் அரைகுறையான நைட் ட்ரெஸ்ஸில் கீழே உட்கார்ந்து கொண்டு படுகவர்ச்சியாக அத்தனையும் தெரிய போட்டோக்களை வெளியிட்டுள்ள பனிதா சந்து பிரபல போட்டோகிராஃபர் அவிராஜ் சிங் எனக்கு உங்க கூட தான் ஷூட் பண்ணனும் என அடம்பிடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











