'முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது...' காதலர் தினத்தில் கணவருக்கு காதல் கடிதம்... பாவனா உருக்கம்

By

சென்னை: காதலர் தனத்தில் தனது காதல் பற்றி நடிகை பாவனா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு பரபரப்பாகி வருகிறது.

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.

கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

கன்னட ரீமேக்

கன்னட ரீமேக்

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இப்போது, சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய பொட்டு

பெரிய பொட்டு

சூப்பர் ஹிட்டான பஜராங்கி படத்தின் அடுத்த பாகம் இது. ஹர்ஷா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை பாவனாவின் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்ப்ட்டது. அதில் கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய பொட்டு, தலையை விரித்து போட்டபடி ஆக்ரோஷமாக இருந்தார் பாவனா. இந்த லுக் வரவேற்பை பெற்றது.

உருக்கமான போஸ்ட்

உருக்கமான போஸ்ட்

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை பாவனா. அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நான் முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது, 'எனக்கான அவர்' நீங்கள்தான் என்பது தெரியாது. தயாரிப்பாளர்- நடிகர் என்ற உறவில் இருந்து தொடர்ந்து நட்பானோம்.

நட்பில் இருந்தே

நட்பில் இருந்தே

அவர்கள் சொல்வது போல, சிறந்த உறவுகள் நட்பில் இருந்தே தொடங்குகின்றன. நாங்கள் காதலில் விழுந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களை காயப்படுத்திய விஷயங்களில் இருந்து நாங்கள் வலுவாகவே வெளியே வந்தோம். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் போராடுவோம். அதற்கு எதிராக வாழ்வோம். என்னுடன் நீங்கள் இருப்பதற்கு நன்றி. ஐ லவ் யூ' என்று தெரிவித்துள்ளார். தனது காதல் கணவருக்காக, அவர் எழுதிய இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X