டோவினோ தாமஸுடன் லிப் லாக் காட்சியில் நடித்த பாவனா...முகம் சுளித்த ஃபேன்ஸ்!
சென்னை: தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் ஆடியன்சுக்கு தெரிந்த முகமாக மாறினார் நடிகை பாவனா. தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்துள்ளார். தழையத் தழைய புடவைக் கட்டிக்கொண்டு வரும் பாவனா, மலையாளப்படமான நடிகர் திலகம் படத்தில் முத்தக்காட்சியில் தாராளம் காட்டி நடித்துள்ளார்.
நடிகை பாவனா மலையாளத்தில் நம்மல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படவாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. அந்த நேரத்தில் இயக்குநர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். அதன் பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். ஜெயம் ரவியுடன் பாவனா இணைந்து நடித்த தீபாவளி திரைப்படம் பாவனாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தில் இடம் பெற்ற கண்ணன் வரும் வேளை பாடலும், பாவனாவின் ஆட்டத்தையும் ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

சினிமாவில் தலைகாட்டவில்லை: படங்களில் பிஸியாக நடித்து வந்த பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்து மலையாள பிரபலங்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வரமுடியாத பாவனா பலவிதமான மன வலியை அனுபவித்து வந்தார். பட வாய்ப்புகள் தேடி வந்த போதும் படத்தில் நடிக்கும் மனவலிமை அவரிடம் இல்லாததால், படவாய்ப்பை மறுத்து வந்தார்.
மீண்டும் சினிமாவில்: அந்த நேரத்தில் அவருக்கு துணையாக கன்னட நடிகர் ஷிவராஜ் குமார், பாவனாவை அழைத்து பேசி தைரியம் கொடுத்து கன்னட சினிமாவில் நடிக்கவைத்தார். கன்னடத்தில் இவர் நடித்த அனைத்துப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அசல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடம் கழித்து தமிழில் 'தி டேர்' என்ற த்ரில்லிங் கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாவனாவின் சொந்த அண்ணன் ஜெயதேவ் இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் திலகம்: நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் நடிகை பாவனா, டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள நடிகர் திலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த மாதம் மே 3ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் கிரீடம் என்ற பாடல் வெளியாகி உள்ளது. அந்த பாடலில் பாவனா டோவினோ தாமஸுடன் லிப் லாக் முத்தக்காட்சியில் தாறுமாறாக நடித்துள்ளார். அந்தபாடல் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் டென்ஷனாகி என்ன பாவனா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள்: இயக்குனர் ஜீன் பால் லால் இயக்கத்தில் டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், பாவனா, தியான் சீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ, அஜு வர்கீஸ், ஸ்ரீநாத் பாசி, லால், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே 3ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் டோவினோ தாமஸ், தனிப்பட்ட மற்றும் தொழில் நெருக்கடிகளைக் கையாளும் டேவிட் படிக்கல் நடிகராக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











