பளபளக்குதே.. டப் பாத்தில் அப்படி ஒரு போஸ்... இளைஞர்களை மெர்சலாக்கிய நடிகை!

சென்னை: தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர், மலையாள நடிகை பாவனா. தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் டப் பாத்தில் இருக்கும் விதவிதமான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பாவனா மலையாளத்தில் 'நம்மல்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படவாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. அந்த நேரத்தில் இயக்குநர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்தார். ஜெயம் ரவியுடன் பாவனா இணைந்து நடித்த தீபாவளி திரைப்படம் பாவனாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தில் இடம் பெற்ற கண்ணன் வரும்வேளைபாடலும், பாவனாவின் ஆட்டத்தையும் ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

Actress bhavana menon latest instagram pics trending on social media

தீராத மனவலி: படங்களில் பிஸியாக நடித்து வந்த பாவனா ஒரு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்து மலையாள பிரபலங்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வரமுடியாத பாவனா பலவிதமான மன வலியை அனுபவித்து வந்தார். பட வாய்ப்புகள் தேடி வந்த போதும் படத்தில் நடிக்கும் மனவலிமை அவரிடம் இல்லாததால், படவாய்ப்பை மறுத்து வந்தார்.

Actress bhavana menon latest instagram pics trending on social media

பல வருடத்திற்கு பிறகு: அந்த நேரத்தில் அவருக்கு துணையாக கன்னட நடிகர் ஷிவராஜ் குமார், பாவனாவை அழைத்து பேசி தைரியம் கொடுத்து கன்னட சினிமாவில் நடிக்கவைத்தார். கன்னடத்தில் இவர் நடித்த அனைத்துப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அசல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடம் கழித்து தமிழில் 'தி டேர்' என்ற த்ரில்லிங் கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாவனாவின் சொந்த அண்ணன் ஜெயதேவ் இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Actress bhavana menon latest instagram pics trending on social media

விதவிதமான போட்டோஸ்: இவர் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டப் பாத்தில் சில்வர் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், லைக்குகளை மலை போல் குவித்து இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X