Bhavana: என்னை நிரூபிச்சிக்கிட்டே இருக்க முடியாது.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனா!
சென்னை: நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த பாவனா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், கூடல் நகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணமான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் பாவனா. தற்போது ஹண்ட் என்ற மலையாள படம் இவரது நடிப்பில் ரிலீசாகியுள்ளது. இதனிடையே, தன்னுடைய கணவரை பாவனா பிரிந்து விட்டதாக தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது பாவனா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை பாவனா: நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் என்ட்ரி கொடுத்து முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். கூடல் நகர், ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், தீபாவளி, ராமேஸ்வரம் என இவரது படங்கள் அனைத்துமே மிகுந்த வரவேற்பை பெற்றவை. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துவரும் பாவனா திருமணமான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாவனா நடிப்பில் ஹண்ட் என்ற படம் மலையாளத்தில் ரிலீசாகியுள்ளது.
ஹண்ட் படம்: சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள ஹண்ட் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவர் தனது காதல் கணவரை பிரிந்து விட்டதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதன் உண்மையை அறிய முடியாமல் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்த நிலையில் பாவனா இதற்கு பதில் அளித்துள்ளார். தான் எப்போதுமே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டதில்லை என்று பாவனா கூறியுள்ளார். தன்னுடைய கணவருடன் தான் இருக்கும்படியான புகைப்படங்களையும் பகிர்ந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கணவருடன் விவாகரத்து?: அதனால்தான் தன்னுடைய கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து தவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் தவறு என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் இப்படி வதந்திகள் பரப்பப்படுவதால் மட்டுமே கணவருடன் இணைந்திருக்கும்படியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டிருக்க முடியாது என்றும் பாவனா தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாவனா தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டார் என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: ஆயினும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக காணப்படும் பாவனா, தற்போது பகிர்ந்துள்ள போஸ்ட் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சேகுவேராவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி அவர் இந்த பதிவை செய்துள்ளார். இந்த உலகத்தில் யாருக்கு அநீதி நடந்தாலும் சரி, அதன் உண்மை தன்மையை ஆழமாக புரிந்துக் கொள்ளும் திறமை வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை குறிப்பிடும்வகையில் பாவனாவின் இந்த போஸ்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











