தற்கொலை செய்த கணவரை நினைத்து கண்ணீர்விட்ட நடிகை.. 2வது திருமணத்திற்கு ரெடி.. நண்பரை மணக்கிறார்!

Recommended Video

Pavani Reddy Exclusive interview: Opens up about 2nd marriage |Filmibeat Tam

சென்னை: கணவர் தற்கொலை செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை பாவனி ரெட்டி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.

நடிகை பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தெலுங்கு சீரியல் நடிகையான பாவனி ரெட்டி தமிழிலும் பிரபலமாகிவிட்டார். அதுமட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார்.

திருமண வாழ்க்கையில் குழப்பம்

திருமண வாழ்க்கையில் குழப்பம்

நடிகை பாவனி ரெட்டி கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த 2017 மே மாதம் கணவர் பிரதீப் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாவனி பின்னர் மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கண்ணீர்விட்ட நடிகை

கண்ணீர்விட்ட நடிகை

இந்நிலையில் நமது பிலிமிபீட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார் பாவனி ரெட்டி. அப்போது தனது கணவர் தற்கொலை குறித்து பேசிய அவர் கண்ணீர் விட்டு அழுதார். தான் மட்டும் சென்றிருந்தால் தனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார்.

கண்களில் வழிந்த கண்ணீர்

கண்களில் வழிந்த கண்ணீர்

அவர் விளையாட்டுத்தனமாக செய்தது வினையாக முடிந்துவிட்டது என்றும் பாவனி கூறினார். தான் அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் உள்ளேன் என்று கூறிய அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததை காண முடிந்தது.

குடும்ப நண்பருடன் திருமணம்

குடும்ப நண்பருடன் திருமணம்

தொடர்ந்து பேசிய அவர் தான், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறினார் பாவனி.

இதயத்துடிப்புடன் டாட்டூ

இதயத்துடிப்புடன் டாட்டூ

மேலும் தனது கையில் வறைந்துள்ள டாட்டூ குறித்து கேட்டதற்கு பதிலளித்த பாவனி, தனது முன்னாள் கணவர் பிரதீப் பெயரை ஹார்ட்டின் மற்றும் இதயதுடிப்புடன் வறைந்திருக்கும் டாட்டூவை காட்டினார். இதனை ஆனந்துதான் பரிசளித்தார் என்றும் கூறினார்.

வாழ்க்கை கொடுத்த ஆனந்த்

வாழ்க்கை கொடுத்த ஆனந்த்

முழுக்க முழுக்க பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று அறிவித்துள்ள பாவனி, இம்மாதம் திருமணம் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றார். தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்திருந்த தனக்கு ஆனந்த் வாழ்க்கை கொடுப்பதாகவும் கூறினார்.

யாருக்கு தேங்க்ஸ்?

யாருக்கு தேங்க்ஸ்?

யாருக்கு சாரி சொல்ல விரும்புகிறீர்கள்? யாருக்கு தேங்க்ஸ் சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பாவனி, தனது முன்னாள் கணவர் பிரதீப்புக்கு சாரியும் தனது வருங்கால கணவருக்கு தேங்க்ஸும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X