சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை பலர் தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து சமீபகாலமாகவே நடிகைகள் மௌனம் கலைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் நடிகையும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையுமான பவானிஸ்ரீ அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜஸ்ட்மெண்ட்.
அட்ஜஸ்ட்மெண்ட்: சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

வாய் திறந்த நடிகைகள்: சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பவானிஸ்ரீ பேட்டி: இந்நிலையில் நடிகையும், ஜிவி பிரகாஷின் தங்கையுமான பவானிஸ்ரீ சமீபத்தில் அளித்த பேட்டியில், "சினிமாவில் இதுவரை அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒன்றை நான் சந்தித்தில்லை. ஆனால் பெண்களின் பயமும், தயக்கமும்தான் சிலர் இங்கு தவறு செய்ய காரணம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீ டூ போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. ஒருவர் உங்களை தவறாக அணுகினால் அதை வெளியே கொண்டு வந்தாலே போதும். மற்றவருக்கு அது நடக்காமல் தடுத்துவிட முடியும். எனவே இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் பயப்பட தேவையில்லை.
கிளாமர் எல்லாம் ஒன்றும் இல்லை: இப்போது நல்ல கதைகள்தான் வெற்றி பெறுகின்றன. கமர்ஷியல் படங்களில்கூட கதைகள் இருக்க வேண்டும். கிளாமரை மட்டும் நம்பி எந்தக் கதையும் இங்கு நிற்பதில்லை" என்றார். முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பவானி; அந்தப் படத்தில் நன்றாக நடித்து பெயர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











