43 வயதிலும் அதே இளமையுடன் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பிரபல தமிழ் நடிகை !
சென்னை : ரோஜா கூட்டம்,பத்ரி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகையாக உள்ளவர் நடிகை பூமிகா
இப்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்து தெலுங்கில் அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பைக் ரேஸராக புதிய திரைப்படத்தில் நடித்து வரும் பூமிகா இப்பொழுது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இளமையுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற
விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை பூமிகா தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற தம்முடு திரைப்படம் தமிழில் பத்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் விஜய்க்கு ஜோடியாக செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தவர் பூமிகா.

எந்த படமும் நடிக்கவில்லை
பத்ரி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். இரண்டாவதாக நடித்த ரோஜா கூட்டம் திரைப்படமும் பூமிகாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரோஜாக்கூட்டம் மற்றும் பத்ரி என பூமிகாவுக்கு நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றாலும் அதை தொடர்ந்து தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

சில்லுனு ஒரு காதல் ஐஷுவாக
மீண்டும் பூமிகாவை தமிழ் சினிமாவிலேயே காண ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு சார்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். ஐஷு என்ற கதாபாத்திரத்தில் சில்லுனு ஒரு காதல் படத்தில் முதல் பாதியில் காதலியாகவும் இரண்டாவது பாதியில் முன்னாள் காதலியாகவும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்ற பூமிகா இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் சில்லுனு ஒரு காதல் ஐஷுவாக தனி இடத்தை பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

43 வயதிலும் அதே இளமையுடன்
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பூமிகா நானியின் மிடில் கிளாஸ் அப்பாயி படத்தில் அக்காவாக நடித்து மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்பொழுது பைக் ரேஸிங்கை மையப்படுத்தி உருவாகிவரும் இதி மா கதா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு 43 வயதிலும் அதே இளமையுடன் பார்க்கப் பார்க்க திகட்டாத அழகில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











