டோரா புஜ்ஜி ஸ்டைலில் கலக்கும் பூமிகா... செம க்யூட் நீங்க!
சென்னை : திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பூமிகா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தமிழில் ஓரிரு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் தெலுங்கில் எக்கச்சக்கமான கதைகளில் அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த புதிய படத்தின் டிரைலரை பார்த்த அஜித் குமார் புகழ்ந்து பேசி இருந்தது வைரலான நிலையில் இப்பொழுது டோரா புஜ்ஜி லுக்கில் பாப் கட்டிங்கில் பார்க்கவே செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை
பத்ரி, ரோஜாக்கூட்டம்,சில்லுனு ஒரு காதல் என தமிழில் இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாக இருக்கும் பூமிகாவை மீண்டும் தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் மாபெரும் வெற்றிபெற்ற போதிலும் பூமிகாவுக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அஜித்குமார் புகழ்ந்து பாராட்டி
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் பூமிகாவுக்கு அம்மா ,அக்கா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்கள் தொடர்ந்து வர அதையும் விடாமல் வெளுத்துக்கட்டி வரும் அதே சமயம் தெலுங்கில் இதி மா கதா என்ற பைக் ரேஸை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் அதைப் பார்த்த நடிகர் அஜித்குமார் புகழ்ந்து பாராட்டியதோடு படக்குழுவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது வைரலானது.

கண்ணை நம்பாதே
இவ்வாறு தெலுங்கு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் பூமிகா தமிழிலும் படங்களில் ஒப்பந்தமாகி இருக்க
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்க உள்ளார்.
Recommended Video

ஸ்ரீதேவி போலவே இருக்கின்றீர்கள்
இவ்வாறு தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி எவர்கிரீன் கதாநாயகியாக உள்ள பூமிகா 42 வயது ஆகி இருந்தாலும் இன்றும் அதே இளமையுடன் இருக்க ரசிகர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் எக்கச்சக்கமான க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு குஷிப்படுத்தி வைக்கிறார். அந்தவகையில் இப்பொழுது டோரா புஜ்ஜி லுக்கில் பாப் கட்டிங் ஸ்டைலில் செம க்யூட்டாக நின்றுகொண்டு கனவு உலகம் என பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வர ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் அதில் ஒரு ரசிகர் இந்த லுக்கில் நீங்கள் பார்ப்பதற்கு நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கின்றீர்கள் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











