வித்தியாசமான டிரஸ்ஸில் பிந்துமாதவி..லோ நெக்கில் செம ஹாட்டான போஸ்!

சென்னை: சூப்பர் கூலான வித்தியாசமான காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிந்துமாதவி.

விறுவிறு கதைக்களத்தில் உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கவர்ச்சியில் இதுவரை அடக்கியே வாசித்து வந்த பிந்து மாதவி இப்பொழுது கவர்ச்சி கன்னிகளுக்கே ஈடு கொடுக்கும் வகையில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கலக்கி வருகிறார்.

கழுகு

கழுகு

கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு உள்ளிட்ட சில வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக உள்ள நடிகை பிந்துமாதவி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.
ஆவக்காய் பிரியாணி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழுக்கு பொக்கிஷம் மற்றும் வெப்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அறிமுகமானதைத் தொடர்ந்து கழுகு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கைகொடுத்து நல்ல நடிகை என பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.

நல்ல கதைகளை

நல்ல கதைகளை

கழுகு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வந்த பிந்து மாதவிக்கு அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்து கைகொடுத்து இருந்தாலும் சில திரைப்படங்கள் இவரின் மார்க்கெட்டை கீழே இறக்கி விட்டது. இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு அதன் மூலம் புகழ் மேலும் அதிகரிக்க இப்பொழுது தமிழில் மட்டும் முழுமூச்சுடன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரத்தம் சொட்டச் சொட்ட

ரத்தம் சொட்டச் சொட்ட

அந்த வகையில் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வரும் யாருக்கு அஞ்சேல் திரைப்படத்தில் நடித்து வரும் இவர், அதில் இதுவரை நடித்திராத ராவான கதாபாத்திரத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட ஆக்சனில் தெரிக்கவிட்டு இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

நெகட்டிவ் ரோலில்

நெகட்டிவ் ரோலில்

நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிந்து மாதவி அதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதில் பிரபல கன்னட நடிகர் சதீஷ் நெகட்டிவ் ரோலில் நடிக்க. ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பகைவனுக்கு அருள்வாய் சூப்பர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிறது என சொல்லப்படுகிறது.

மெய்மறந்து போஸ்

மெய்மறந்து போஸ்

இவ்வாறு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதற்கு இடையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிந்து மாதவி ஏற்கனவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வந்த நிலையில் இப்பொழுது வித்தியாசமான லோ நெக் டிரஸ்ஸில் மெய்மறந்து போஸ் கொடுத்திருக்கும் பல புகைப்படங்கள் இணையதளத்தில் கலக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X