கவர்ச்சி தாகமூட்டும் பிந்து மாதவி.. வேற லெவல் ட்ரெண்டிங்கில் போட்டோஸ்!
சென்னை : கழுகு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டும் பாகமும் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருந்த நடிகை பிந்து மாதவிக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அது அமைந்தது.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, த்ரிஷா ஆகியோரின் வரிசையில் இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படத்திலும் நடித்து வரும் நடிகை பிந்து மாதவி ரத்தம் தெறிக்கும் திரில்லர் கதையில் நடித்து வருகிறார்.
பகைவனுக்கு அருள்வாய்,யாருக்கும் அஞ்சேல் என அடுத்தடுத்த திரைப்படங்கள் பிந்து மாதவிக்கு வெளியாக இருக்க, இப்பொழுது படு கவர்ச்சியில் அனைவரும் கிறங்கிப் போகும் அளவிற்கு ஹாட்டான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறார்.

விமலுக்கு ஜோடியாக
தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்த நடிகை பிந்து மாதவிக்கு கழுகு திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்து, சிறந்த நடிகையாகவும் அதில் இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விமல் ஒன்றாக இணைந்து நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்த காமெடி திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

டீச்சராக
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் டீச்சராக நடித்து அனைவரது இதயங்களிலும் கொள்ளை கொண்ட பிந்து மாதவிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை எதுவும் கொடுக்கவில்லை.

யாருக்கும் அஞ்சேல்
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகிய முன்னணி நடிகைகளைப் போல தானும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து ஹிட்டை கொடுக்க வேண்டுமென முடிவெடுத்து இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து மிரட்டலான திரில்லர் திரைப்படத்தில் நடித்து வர அதற்கு "யாருக்கும் அஞ்சேல்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வெகு விமர்சையாக
சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி முதல் முறையாக இணைந்து அசத்து உள்ள இந்த திரைப்படம் வெகு விமர்சையாக சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

சிறுத்த இடுப்பை
கவர்ச்சிக்கு நோ நோ சொல்லி வந்த பிந்து மாதவியும் இப்பொழுது பச்சைக்கொடி காட்டி கவர்ச்சியில் இறங்கி வெறும் பாவாடை சட்டையில் சிக்குன்னு இருக்கும் சிறுத்த இடுப்பை காட்டிக்கொண்டு,முன்னழகு பக்காவாக தெரிய ஹாட்டான டிரஸ்ஸில் விதவிதமான போஸ்களில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியில் இறங்கி எடுத்துள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை துவம்சம் செய்து ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











