நியோன் பார்ட்டி போட்டோஷூட்டில் கலக்கும் பிந்துமாதவி... தலைவி டக்கரு டோய்!
சென்னை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் கொடியின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் "யாருக்கும் அஞ்சேல்" திரைப்படத்தில் நடிகை பிந்து மாதவி நடித்து வருகிறார்.
கழுகு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் சென்ற ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி சுமாரான வெற்றியையே பெற்றது.
இந்த நிலையில் குறைவாக படங்கள் நடித்தாலும் வித்தியாசமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென முடிவு செய்துள்ள பிந்து மாதவி இப்பொழுது "யாருக்கும் அஞ்சேல்" திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நியோன் பார்ட்டியில் பச்சை நிற உடையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் கலக்கி வருகிறது.

தமிழ் பேசக்கூடிய
முட்ட கண்ணு முழியுடன் பார்க்கும் அனைவரையும் விழுங்கும் அளவிற்கு தனது அழகினால் ரசிகர்களை மயக்கி வரும் பிந்து மாதவி ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் மிக சரளமாக பேசக்கூடிய நடிகை ஆவார்.

விரல்விட்டு எண்ணிவிடலாம்
தெலுங்கில் வெளியான "ஆவக்கா பிரியாணி" திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பிந்து மாதவி தமிழில் "பொக்கிஷம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து சில திரைப்படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் வெளியாகி இருந்தாலும் சொல்லுமளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

லீட் ரோலில்
மிகக் குறைவான திரைப்படங்களில் பிந்து மாதவி நடித்த போதிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் இப்பொழுது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் "யாருக்கும் அஞ்சேல்" திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

திரில்லர் படமாக
"யாருக்கும் அஞ்சேல்" திரைப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் ஒரு திரில்லர் படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

கலர்புல்லாக மாத்தி
மற்ற நடிகைகளைப் போல சமூக வலைதளங்களில் அந்த அளவிற்கு ஆக்டிவாக இல்லாத போதும் அவ்வப்போது ரசிகர்களுக்காக சில புகைப்படங்களை அள்ளித் தெளித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இப்போது நியோன் பார்ட்டி மூடில் இருக்கும் இவர் வண்ண விளக்குகளுக்குள் மூழ்கி பச்சை நிற உடையில் வித விதமான போஸ்களில் அசத்தலாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ள இந்த வித்தியாசமான புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தையும் கலர்புல்லாக மாத்தி வைரலாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











